Thursday, January 30, 2014

இந்த வாரம் கபிலன் விஸ்வநாதன் வழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் போரைத்தடுப்போம் பாடல் வரிகள் .


                          போரைத்தடுப்போம்
                                           கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மனிதரை மனிதர்
சரிநிகர் சமமாய் 
மதிப்பது நாம் கடமை 
வள்ளுவப் பெருமான் 
சொல்லிய வழியில் 
வாழ்வது அறிவுடைமை!
உழைப்பை மதித்து 
பலனை கொடுத்து 
உலகில் போரைத் தடுத்திடுவோம் 
அண்ணன் தம்பியாய் 
அனைவரும் வாழ்ந்து 
அருள் விளக்கு ஏற்றிடுவோம்!

கபிலன் விஸ்வநாதன்:
இந்தப் பாடலில் அமைதி நிறைந்த உலகிற்கு வழி காட்டுகிறார். மக்கள் அனைவரும் சமம் . உயர்வு , தாழ்வு ஏதுமில்லை. ஒற்றுமையாய் வாழ்ந்து முன்னேற வேண்டும்.

Thursday, January 23, 2014

திவ்யா தமிழ்மணி வழங்கிய கவிஞர்.சுரதா அவர்களின் சிக்கனம் கவிதை.

                                  

திவ்யா தமிழ்மணி 
                         சிக்கனம்
                           கவிஞர்.சுரதா                 
                                       
பகட்டுவாழ்க்கை நீராவி போன்றதுவாம் 
சிக்கனம்தான் நீரூற்றைப் போன்றததுவாம் !
சிக்கணத்த்தை வேரோடு பெயர்த்தெரிந்து வறுமையுற்று
விக்கி விக்கி அழுதவர்கள் பலபேருண்டு!
தாராள மனப்பான்மை என்று சொல்லித்
தண்ணீர் போல் பணத்தையெல்லாம் செலவு செய்தல்
தீராத வறுமைக்கு வித்தாம் ; வாழ்வில் 
சிக்கனம்தான் ஒருவனுக்குச் சிறந்த சொத்த்தாம் ;
சீராக செட்டாக ஒவ்வோர் நாளும் சிக்கனமாய் 
பெரியோர் போல் வாழ்ந்து வந்தால் 
பாறாங்கள் மீது விழும் மழை நீர் போலப்
பளிச்சென்று  துன்பமெல்லாம்  சிதறிப் போகும் !

திவ்யா தமிழ்மணி: 
சிக்கனத்தோடு  வாழ்ந்தால் சீரும் சிறப்பும் கிட்டும் ,
சிக்கனமே சிறப்பைத்தரும் . 

Friday, January 17, 2014

இந்த வாரம் மீனா ஹரி வழங்கிய கவிஞர் சுரதாவின் கவிதை சிக்கனம்

                                    சிக்கனம் 
                                                 
                                                  கவிஞர் சுரதா

உரைநடையின் சிக்கனம்தான் கவிதை
 
ஓங்கும் உணர்ச்சிகளின் சிக்கனம்தான்  அடக்கம் 
உரிமைகளின் சிக்கனம்தான் சட்டதிட்டம் 
உணவுகளின் சிக்கனம்தான் பங்கீடாகும்
அரசியலின் சிக்கனம்தான் இரண்டே கட்சி
அனுபவத்தின் சிக்கனம்தான் நீதிநூல்கள் 
பேரோடும்  புகழோடும் வாழ்வதற்குப் 
பேரறிவே துணைபுரியும்; நாமெல்லோரும் 
சீரோடும் , சிறப்போடும் வாழ்வாதற்குச் 
சிக்கனம்தான் துணைபுரியும்!
 மீனா ஹரி 
சுரதா 1921 முதல் 2006 வரை வாழ்ந்தார். சிக்கனம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தக் கவிதை மூலம் கூறியுள்ளார். நான் இந்தக் கவிதையைப் படிப்பதற்கு முன்னர் சிக்கனம் பணத்திற்கு மட்டும் தான் என்று நினைத்தேன் . ஆனால் படித்த பின்னர் சிக்கனம் வாழ்வில் அனைத்திற்கும் பொருந்தும் என்று தெரிந்து கொண்டேன்.




                                                                                                                                                                                                                                    

Friday, January 10, 2014

சங்கமன் செந்தில் வழங்கிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தமிழின் இனிமை பாடல் வரிகள்



                             

                                       
                               தமிழின் இனிமை
                                             பாவேந்தர் பாரதிதாசன்

நீலச் சுடர்மணி வானம் -- ஆங்கே
நிறைக் குளிர்வெண்ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் -- ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் -- நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் -- தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் -- பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, -- கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு -- கானில்
நாவிலினி்த்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! --உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !

சங்கமன் செந்தில்:
தமிழின் இனிமை என்ர கவிதையில் பாவேந்தர் பாரதிதாசனார் முதல் பகுதியி வானம், கடல், மற்றும் மலைகளைப் பற்றி மிக அழகாகக் கூறியுள்ளார். மேலும் இரண்டாம் பகுதியில் தமிழர்களின் உனவு முறைகளை பற்றி மிகவும் எதார்த்தமாகக் கூறியுள்ளார்.
தமிழின் இனிமையை முழுமையாக வார்த்தைகளால் வர்ணிக்கவே இயலாது என்றே முடித்துள்ளார்.