Friday, October 17, 2014

பிறப்பும் இறப்பும்....

நம்பிறப்பும் இறப்பும் ஒன்றுதான்ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கமுடியாதுமக்கள் இறப்பின் போது அழுவதையும் துக்கப் படுவதையும்பிறப்பின் போதுமகிழ்ந்து பூரிப்பதையும் பார்க்கும் போது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறதுஇது தவறான கருத்துநம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செய்கை.அழவேண்டுமென்றால் பிறக்கும் போது அழுவதே சரியானதுஏனென்றால்  பிறப்பில்லாமல் இறப்பில்லை.
 தாயின்வயிற்றில் இருப்பது எப்படியிருக்கும் என்று மனிதர்கள் உணர்வார்கள்.அது               எவ்வளவு வசதியற்றதாக இருக்கும்! ஒருகுடிசையில் ஒரு நாள் தங்குவதே மிகவும் கடினமாக இருக்கிறது. அதுவும் கதவு சன்னல்களை மூடிவிட்டோமானால் மூச்சு விடவே முடிவதில்லை. பின் தாயின்வயிற்றில் ஒன்பது மாதம் கழிப்பது என்பது எப்படி இருக்கும்? 
இருந்தாலும் தலையை மறுபடியும் அங்கேயே நுழைக்கப் பார்க்கின்றோம், கழுத்தை     மீண்டும் சுருக்கில்மாட்டிக் கொள்ளவே விரும்பு கின்றோம்.
மரணத்தைப் புரிந்து கொள்ளவில்லையென்றால், வாழ்க்கையே குழப்பமாகத்தான் தோன்றும். 
புத்தர்அவருடைய சீடன் ஆனந்தாவிடம் 'நிலையாமையை'ப் பார்க்கச் சொன்னார். ஒவ்வொரு மூச்சிலும் மரணத்தை பார்க்கச் சொன்னார். மரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்; வாழ்வதற்காகச் சாகவேண்டும். அப்படியென்றால் என்ன? இறப்பதென்றால் நம் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முடிவு கண்டு நிகழ்காலத்தின் உண்மையான  நிலையில் இருப்பது தான். நாம் நாளைக்கு இறக்க முடியாது; இப்போதே இறக்க வேண்டும். உங்களால் செய்ய முடியுமா? முடியுமென்றால்கேள்விகளே இல்லாத அமைதி உங்களுக்குத் தெளிவாக விளங்கும்.
தோன்றும் பொருள் எல்லாம் நிலையற்றவை என்று "அனைத்தும் புரிந்த அந்த ஒருவனுக்குத்" தெளிவாகத் தெரியும். அதனால் அந்த "அனைத்தும்தெரிந்தவன்" மகிழ்வதும் இல்லை; வருந்துவதும் இல்லை. ஏனெனில் மாறிக்கொண்டிருக்கும் நிலைமைகளை வன் தொடர்வதில்லை. மகிழ்ச்சியடைவதுபிறப்பதற்குச் சமம்; சோர்வடைவது இறப்பதற்குச் 
சமம். இறந்த பிறகு மறுபடியும் பிறக்கின்றோம். பிறந்ததால் மறுபடியும் இறக்கின்றோம். நொடிக்கு நொடிபிறப்பதும் இறப்பதும் தான் முடிவற்றுச் சுழன்று கொண்டிருக்கும் சம்சார சக்கரமாகும்





No comments:

Post a Comment