மனிதனுக்குப் பகை ஒன்றுதான். அது அவனுடைய சொந்த மனம் ஆகும். தன்னைத் தான்
வென்றவன் தனக்குத்தானே நண்பன். தன்னைத் தானே கட்டுப்படுத்தாதவன் தனக்குத் தானே பகைவன்.
”ஒருவன் தானே தனக்குப் பகைவன்,
தானே தனக்கு நண்பன்”
தன்னைக் காட்டிலும் உயர்ந்த நட்போ,
பகையோ மனிதனுக்கு யாரும் இல்லை. ஒருவன் தனக்கு நட்பாக இருக்கும் போது இந்த உலகமே நட்பாக
இருக்கும். அப்படியில்லாமல் தனக்குத் தான்
பகையாக இருப்பின் உலகம் முழுவதும் பகையாக மாறிவிடுகிறது. அதாவது, தன் உள்ளத்தின் பகையே
உண்மையான பகை. உள்ளப்பகையாகிய அஞ்ஞானம் அதாவது வேற்றுமை உணர்ச்சி ஒன்றே அழித்தற்குரியது.
தன்னைத் தான் வென்று தனக்குத்தானே நன்மை செய்யும்போது
, தன்னுடைய மனம் தெய்வத்தன்மை உடையதாகிறது.
எனவே மனிதன் அன்பு செலுத்தும்
பழக்கத்தை முதலில் தன்னை நேசிப்பதிலிருந்து தொடங்க வேண்டும் என்பதை பகவத் கீதை தெளிவாக
விளக்கியிருக்கிறது.
No comments:
Post a Comment