வேலைகள்
அல்ல வேள்விகளே!
கவிஞர் தாரா பாரதி
வெறுங்கை என்பது மூடத்தனம்
உன் விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும்
உன் கைகளில் பூமி சுழன்று வரும்.
மூலையில் கிடைக்கும் வாலிபனே
உன் முதுகில் வேலையை தேடுகிறாய்
பாலை வனம் தான் வாழ்க்கை என
வெறும் பல்லவி எதற்குப் பாடுகிறாய்?
விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள்
வேங்கை புலி நீ தூங்குவதா?
நீ இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று
எங்கே கிழக்கு எனத் தேடுவதா?
விழி விழி உன் விழி நெருப்பு விழி
உன் விழி முன் சூரியன் சின்னப் பொறி
எழு எழு தோழா உன் எழுச்சி
இனி இயற்கை மடியில் பெரும் புரட்சி!
அர்ஜுன்
சுவாமி:
இந்தக்
கவிதை நம்முள் இருக்குள் திறன்களை உணர்ந்து அவற்றை நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும்
என்பதை வலியுறுத்துகிறது. உழைப்பு உழைப்பு தரும் என்பதை ஆணித்தரமாகக் காட்டுகிறது இக்கவிதை.
No comments:
Post a Comment