Saturday, December 28, 2013

கீர்த்தி ரமேஷ் வழங்கிய கவிஞர் நாமக்கல்இராமலிங்கம் அவர்களில் பாடல்.




     
                        சும்மா கிடைக்குமோ?

                        கவிஞர் நாமக்கல்  இராமலிங்கம் (1888-1972)

பாடல்
சும்மா கிடைக்குமோ சுதந்திர சுகமது மனமே?
சுத்தமும் பக்தியும் சத்தியம் இல்லாமல்
சூரமும் வேரமும் சொல்லுவதால் மட்டுமே?
(சும்மா கிடைக்குமோ சுதந்திர சுகமது மனமே?)

உழுது பயிரிடாமல் உணவுகள் கிடக்குமோ?
உழைப்பும் களைப்புமின்றி உரிமைகள் அடுக்குமோ?
அழுது அழுதுருகி அன்பின் கண்ணீர் பெருக
ஆர்வத்தால் அனைவருக்கும் சேவைகள் செய்யாமைல்?
(சும்மா கிடைக்குமோ சுதந்திர சுகமது மனமே?)

என்னுடைய சுகங்களில் இம்மியும் குறையாமல்
எல்லோரும் தியாகம் செய்ய இல்லையென்றேசுவேன் சுத்திச் சுத்தி!
சொன்னதைச் செய்வதும் செவதே சொல்வதும்
சுலபமோ நான் அந்தச் சுத்தத்தில் குளிக்காமல்?
(சும்மா கிடைக்குமோ சுதந்திர சுகமது மனமே?)

கீர்த்தி ரமேஷ்
சுதந்திரம் கிடைக்க நாம் அயராது பாடுபட வேண்டும். உணவுகள் கிடக்க உழுது பயிரிட வேண்டும். உரிமைகள் கிடக்க நாம் மக்களுக்குச் செவை செய்ய வேண்டும். நாம் சொன்னதையே செய்வதும், செய்வதையே சொல்வதும் சுலபம் இல்லை. ஆனால், அப்படிச் செய்வது மிகவும் முக்கியம்

Friday, December 20, 2013

இந்த வாரம் திவ்யா பிரபாகரன் வழங்கிய தென்கரைநாட்டு வளம்





                                     தென்கரைநாட்டு வளம்

                                          திவ்யா பிரபாகரன்


காயக் கண்டது சூரிய காந்தி
கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்க்குலைச் செந்நெல்
தணிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்
சீவல மங்கைத் தென்கரை நாடே


திவ்யா:

முக்கூடற்பள்ளு எனப்படும் இந்த செய்யுளில் தென்கரை நாட்டு வளத்தை எதிர்மரையான உதாரணங்களோடு படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். மேற்கே சூரியன் மறையும் போது சூரிய காந்திப்பூ வாடிவிடும். ஆனால். தென்கரை நாட்டு மக்கள் ஒருபோதும் பசியால் வாடியதில்லை. கட்டித்தயிர் கலங்கிவிடும். எம்மக்கள் மனம் கலங்கிக் கண்டதில்லை.  நாளும் பொழுதும் ஓடி மறையலாம். எங்கள் படை ஒளிந்ததில்லை.  நன்கு முற்றிய செந்நெல் சாய்வதுண்டு. எங்கள்  வீரர்கள் தலை சாய்ந்ததில்லை. சந்தனக்கட்டை தேய்வதுண்டு.  தென்கரை நாட்டு வளமோ குறைந்ததே இல்லை என்று அழகாய் சொல்லி முடித்துள்ளார்.



































              திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்

                                          வழங்கியவர் அனுஸ்ரீ ராமமூர்த்தி




வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்
ககனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே.

இதன்பொருள்:
திருக்குற்றாலமலையில் உள்ள ஆண் குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்து மந்திகளுக்கு கொடுத்துக் கொஞ்சி மகிழும். அப்பழங்களைத் தின்றும் சிதைத்தும் பெண் குரங்குகள் விளையாடும். இவ்வாறு மந்தி சிந்திய பழங்களை வான் உலகில் வாழும் தேவர் கூட்டம் மிக வேண்டி விரும்பிக்கேட்கும்.
காடுகளில் வாழும் வேடர்கள் தங்கள் கண் பார்வையாலேயே உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள். வான் வழியாகச் செல்லும் சித்தர்கள் கீழிறங்கி இம்மலைக்கு வந்து உடலுக்கு நன்மை அளிக்கும் யோகங்கள் என்னும் சித்து வேலையைச் செய்வார்கள். இம்மலையிலுள்ள தேன்கலந்த மலை அருவியின் அலைகள் மேல் நோக்கி உயர்ந்து பாய்ந்து வானத்தில் இருந்து வழிந்து ஓடும். அதனால் செந்நிறச் சூரியனின் தேரில் பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச்சக்கரமும்வழுக்கிவிழும்.
வளைந்த இளம் பிறையைச் சூடிய சடை முடியையும் உடையவர் திருக்குற்றாலநாதராகிய சிவபெருமான். அவர் எழுந்தருளியுள்ள சிறப்பு மிக்கது திருக்குற்றாலமலை. அம்மலையே எங்களுக்கு உரியது என்று குறத்தி மலைவளம் கூறுவதாக இப் பாடல் அமைந்துள்ளது.


முழங்கு திரைப் புனலருவி கழங்கென முத்தாடும்
முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக்கொண்டோடும்
கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்படி நடப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்

செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்குகொடை மகராசர் குறும்பலவிலேசர்
வளம்பெருகுந்திரிகூட மலையெங்கள் மலையே!

முழங்கும் ஓசை கொண்ட அலைகளையுடைய நீர் வீழ்ச்சி, செல்லும் வேகத்தில் கழங்காடுகின்ற தென்னும்படி முத்துக்களை ஒதுக்கிச் செல்லும்; அந்த அருவி, மக்கள் வாழுகின்ற வீட்டின் முற்றங்களிலெல்லாம் பரவிச் சென்று சிறுமிகளின் மணல்வீடுகளை அழித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும்; நாங்கள் மலைக்கிழங்குகளைத் தோண்டியும், தேன் இறால்களைப் பிய்த்து எடுத்தும், மலையின் செழிப்பைப் பாடிக்கொண்டே கூத்தாடுவோம்; பூண்கட்டிய யானைக்கொம்புகளை ஒடித்து உலக்கையாகக் கொண்டு வறுத்த தினைத் தானியத்தை இடிப்போம். இளமை பொருந்திய குரங்குகள் இனிமையுள்ள மாம் பழங்களையே பந்தாகக் கொண்டு அடித்து விளையாடும்; தேன் பெருகி ஓடுகின்ற செண்பகப் பூவின் மணம், தேவருலகினிடத்தே போய்ப் பரவும்; அருட்கொடை வழங்குகின்ற தேவாதி தேவராகிய குறும்பலா மரத்தினடியில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதருக்குரியதான எல்லா வளமும் பெருகியிருக்கின்ற திருக்குற்றாலமலையே எங்களுக்குரியதாக நாங்கள் வாழுகின்ற மலையாகும்