இந்த வாரம் அநிருத் ஸ்ரீனிவாசராகவன் எடுத்துரைத்த ஔவையாரின் மூதுரை மற்றும் அதைப் புரிந்து
கொண்டு அவர் கூறிய கருத்துக்களும்.
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம்.
அநிருத் : குளத்தில் நீர் அளவைப் பொறுத்துத் தாமரை பூப்பது போல் கற்கும் நூல் அளவைப் பொறுத்து நம் அறிவு.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.
அநிருத் : நல்லவர்களைப் பார்ப்பதும், அவர்கள் பேச்சைக் கேட்பதும், அவர்களைப் பற்றிப் பேசுவதும் நன்று. அவர்களோடு தொடர்ந்து பழகி வருதல் மிகவும் நன்று.
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
அநிருத் : நெல்லுக்கு விடும் நீர், புல்லுக்கும் போய் சேர்வது போல் நல்லவர்கள் உள்ள இடத்தில் பெய்யும் மழை மற்றவர்களுக்கும் போய்சேர்கிறது.
No comments:
Post a Comment