கீதை சொல்லும் பாதை…
பல்வேறு
பிரச்சினைகளின் தொகுப்பே மனித வாழக்கை. பிரச்சினைகளோ சிறு தொந்தரவோ இல்லாத
மனிதர்கள் யாரும் இருக்கமுடியாது. கடலில் இடைவிடாமல் அலைகள் எழுந்து எழுந்து
அடங்கிக் கொண்டுதான் இருக்கும். இதுபோல்தான் மனிதன் வாழ்விலும் பிரச்சனைகள்
அடுக்கடுக்காகத் தொடர்ந்து ஏதாவது நிகழ்வதுதான் இயல்பு.
மகாத்மா காந்தி கீதையைத் தம் வாழ்க்கையில் மேற்கொண்டு வாழ்ந்தவர்.
அதனால்தான் உலகத்தில் இதுவரை யாராலும் நிகழ்த்தமுடியாத அற்புதத்தை அவர்
நிகழ்த்திக் காட்டினார். வானத்தில் ஒளி வீசித் திகழும் சூரியன். அதன் ஒளிக்கதிரின்
ஆற்றல் அளவிட முடியாது. ஆனால் அந்த ஒளி வெள்ளத்தை ஒரு சிறு மேகக் கூட்டம்
தடுத்துவிடும். அதுபோல்தான், மகத்தான ஆற்றலைப் பெற்ற மனிதனை அவன் மனதில் தோன்றும்
சிறு கலக்கம், குழப்பம் அவனை இருட்டில் தள்ளிவிடும். அவன் ஆற்றலை மறைத்துவிடும்
அவன் நிலை தடுமாறி விடுவான். இதிலிருந்து விடுபட்டு மனிதன் தன் முழு ஆற்றலுடன்
செயல்படும் வழியைத்தான் கீதை சொல்கிறது.
நம்மிடம் இருக்கும் நல்ல குணத்திற்கும் தீய குணத்திற்கும்
ஏற்படும் போரையும், அதில் தீய குணத்தின் பிடியிலிருந்து நாம் எப்படி விடுபடலாம்
என்பதையும் கீதை போதிக்கிறது. கீதையின் போதனையே மனிதன் கவலையில் இருந்து எப்படி
விடிபடுவது என்பதுதான். பயத்திலிருந்து விடுபட்டுப் பயமில்லாமலும்
மகிழ்ச்சியுடனும் அமைதியாகவும் எப்படி வாழ்வது என்பதுதான். இறை சக்தியிடம்
அசைக்க முடிக்க நம்பிக்கை உடையவன் எதற்கும் பயப்படமாட்டான். கலங்க மாட்டான்.
எப்போதுமே சமநிலையுடன் விளங்குவான்.
கடவுளை நம்பவேண்டும் என்றால், கடவுள் எங்கே இருக்கிறார்? அவரை எப்படிக்
காண்பது என்ற கேள்வி எழும்.இதற்குப் பதிலாக,”இந்த எல்லையற்ற படைப்புதான் இறைவனின்
தோற்றம்” என்று கீதை சொல்கிறது. மனிதன் கடமையைச் செய்யும்போது மனித மனத்தில்
குழப்பம் ஏற்படுகிறது. நல்ல குணத்திற்கும் தீய குணத்திற்கும் மோதல் ஏற்படும்
போதுதான் கீதை பிறக்கிறது. தைரியம் இல்லாத இடத்தில் நல்ல சக்திகள் வளர்வதற்கு
வாய்ப்பில்லாமல் போய்விடும். எல்லா நல்ல குணங்களும் தளபதி, அதிநாயகன் அஞ்சாமை,
தைரியம் இப்படி இருபத்தாறு குணங்களைக் குறிப்பிட்டு கீதையில் இறுதியில் தற்பெருமை
கொள்ளாமை என்ற குணத்தையும் பின் தளபதியாகக் கூறப்படுகிறது.
இதை,
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை
நயவற்க நன்றி பயவா வினை. என்கிறார் வள்ளுவர்.
No comments:
Post a Comment