மைந்தனா? மகனா? ஒரு விளக்கம்.
பெற்றோர்கள்
தமது குழந்தைகளுக்குப் பெயர் வைத்திருந்தாலும், ஆசையும் அன்பும் அதிகமாகும் போது அழைக்கப்
பயன்படுத்துவது பெரும்பாலும் வேறு பெயராகத்தான இருக்கும். சிலர் தங்கமே, என் செல்வமே,
மகனே, என் செல்லப்பிள்ளையே என்றெல்லாம் அழைப்பர். பாசமும் பரிவும் பொங்கி வரும்போது
பொருள் அறிந்தும் அறியாமலும் பல பெயர்களில் அழைக்கிறோம்.
அதுபோல்
இராமர் குழந்தையாக இருந்தபோது எப்படி அழைக்கப்பட்டார் என்பதன் மூலம் சில அரிய கருத்துக்களை
விளக்குகிறார் அருணகிரிநாத சுவாமிகள்.
எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண்
வருக எனதா ருயிர்வருக
விளக்கம்:
மைந்தனும் மகனும் ஒன்றா என்றால் இல்லை.
பாலகன் – பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தையின் பெயர்.
எந்தை – என் அப்பா
மைந்தா - தன் குடும்பம்
மட்டுமில்லாது தெரிந்த மற்றும் தெரியாத ஊரில் உள்ள அனைத்துக் குடும்பத்தையும் காப்பாற்றக்
கூடியவன்.
மகனே- தன் குடும்பத்தை மட்டும் காப்பாற்றுவன் மகன்.
பிள்ளை- தாய் தந்தைக்குத் தொல்லையாக இருப்பவன்.
என் கண்- என்னிடம் வா
எனதாருயிர் - என் ஆருயிர்
என் கண்- என்னிடம் வா
எனதாருயிர் - என் ஆருயிர்
No comments:
Post a Comment