Tuesday, August 13, 2013

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

Monday, August 12, 2013

தமிழ்த்தோட்டம்

                                                தமிழ்த்தோட்டம்


மொழிகளெல்லாம்
மோகப்படும் முத்தமிழை,
சிந்தையெல்லாம்
சந்தமிடும் செந்தமிழை,
இதயமெல்லாம்
இசைபாடும்  இசைத்தமிழை,
மனதெல்லாம்
மந்திரமிடும் முத்தமிழை,

உள்ளத்தில் உறவாக்கி
தமக்குள்ளே உயிராக்கி
நினைவுகளைப் பயிராக்கி
தமிழ்மனக்கனவுகளால்
அமைந்தது  "எங்கள் பிளேனோ தமிழ்ப்பள்ளி"!
திரு.வேலு &  திருமதி விசாலாக்ஷி
அமைத்தது இந்தத் "தமிழ்த்தோட்டம்".