Friday, February 27, 2015

" அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’"

இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ – ஆச்சரியத் தகவல்
இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் கி.மு. 600) சுஸ்ருதர், உலகளவில்
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவமாமேதை. இவர் ரிஷி விஸ்வாமித்திரருக்குப் பிறந்தவர். உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமான “சுஸ்ருத சம்ஹிதை யை” மனித சமுதாயத்திற்க்குக வழங்கியவர். மயக்க மருந்து அ றிவியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாகப் போற்ற ப்படுபவர்.
இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், பன்னிரண்டு விதமான எலு ம்பு முறிவுக்கும், ஆறு விதமான மூட்டு நகர்வகளுக்கும் உண்டா ன மருத்துவ முறையை விளக்கிருக்கிறார். 125 விதமான அறு வை சிகிச்சை கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார். இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட் டை விளிம்பு கத்திகள், வடிக்கும் ரப்பர் குழாய் மற்றும் மலக்குட ல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும் பறவை களின் தாடைஎலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டவை .
இவர் மேலும் பல்வேறு தையல் முறைகளைப்பற்றியும் விளக்கியுள்ளார். குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு போ ன்றவற்றை நூலாக்க் கொண்டு தைத்திருக்கிறார். சுஸ்ருத சம் ஹிதையில், 300 விதமான அறுவை சிகிச்சை முறைகள் விள க்கப்பட்டுள்ளன. ஆச்சார்யர் சுஸ்ருதர், மருத்துவ உலகின், குறிப் பாக அறுவை சிகிச்சையின் மாமேதை என்று போற்றப்படுகிறார்.

Friday, February 20, 2015

கொஞ்சம் உணவு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?

கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?
தொலைதூரப் பயணங்களின்போது அரிதாக ஹோட்டல் உணவுகளைப் பயன்படுத்தியவர்களுக்குக்கூட, இன்று ஹோட்டல் உணவு அத்தியாவசியமாகிவிட்டது. சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூட பிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்துதான் தருகிறார்கள். எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கையே யன்படுத்துகின்றனர். ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் கொஞ்சம் பிளாஸ்டிக்கும் உள்ளே போவதுதான் அதிர்ச்சி.
ஹோட்டல்களில் நாம் சாப்பிடுவது இட்லி, தோசை, சாதம் மட்டுமல்ல; கூடவே பிளாஸ்டிக்கில் இருக்கும் ரசாயனங்களும்தான். உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிச் சொல்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஆய்வாளருமான  நித்யானந்த் ஜெயராமன்.
நல்ல பிளாஸ்டிக்?
‘நல்ல பிளாஸ்டிக்’ என்கிற ஒன்று இல்லவே இல்லை. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்றே வகைப்படுத்த முடியும். ஒரு லட்சம் சிந்தடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில் ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளனர். மீதம் உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும் என யாருக்குமே தெரியாது.
பொருளாதாரத்தில் வளமாக உள்ள, சத்தான உணவு உண்பவர்களின் ரத்தத்தை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் 275 ரசாயனங்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்த நிலை என்றால் பிற மக்களின் நிலை இன்னும் மோசம்.
பிரஷ் முதல் பால் வரை!
நம் அன்றாட வாழ்வில் காலையில் பல் துலக்குவதில் தொடங்கி இரவில் பால் குடிப்பது வரை எங்கும் எதிலும் பிளாஸ்டிக்தான். பிளாஸ்டிக் பிரஷ், பிளாஸ்டிக் ப்ளேட், பாக்கெட் பால், லன்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் என எங்கும் பிளாஸ்டிக் மயம். பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவை வைக்கும் போது பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனம் உணவோடு கலந்து விடும். இப்படி ஒவ்வொரு நாளும் தெரிந்தும், தெரியாமலும் ரசாயனங்கள் உணவு மூலமாக தினமும் நம் உடலில் சேர்கின்றன. இதனால் பலவிதமான நோய்களும், குறைபாடுகளும் ஏற்படுகின்றன” என்றார். பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் உணவோடு கலந்து பின்விளைவுகளை எப்படி ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி விளக்குகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரான விமல்ராஜ்.
“பிளாஸ்டிக் பொருட்கள் தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் உருவாக்கப்படுவது இல்லை. தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது. இதில் ஏழு வகையான தாலேட்ஸ்கள் மிக ஆபத்தானவை. நாம் வாங்கும் வாட்டர் பாட்டிலின் அடிப்பகுதியைப் பார்த்தால், முக்கோண வடிவில் எண் 1  என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதே போல பாட்டிலின் லேபிளிலும் ‘ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதை நாம் கவனிக்காமல் பல நாட்களுக்கு அதே பாட்டிலைப் பயன்படுத்தி வருகிறோம். மலிவான விலையில் உற்பத்தியாகும் பாட்டிலில் இருந்து டி.இ.எச்.பி (Di(2-Ethylhexyl) Phthalate (DEHP)) என்ற ரசாயனம் வெளியாகி நீருடன் கலக்கும். இது புற்றுநோய் உண்டாக்கும் காரணியாக மாறுகிறது.
தாலேட்ஸ் உள்ள பி்ளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு இயல்புக்கு மீறிய பாலின உறுப்புகள் வளர்ச்சி, ஆண்மைக்்குறைவு, குழந்தை களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு அதிக மார்பக வளர்ச்சி, கருச்சிதைவு, குறைப்பிரசவம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது” என்றார்.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் நாராயணன்.
‘‘ஹோட்டலில் 40 மைக்ரான்கள் கொண்ட கவர்களில்தான் உணவை பேக் செய்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆவி பறக்க, சூடான சாம்பார், ரசம், பொரியல் என பேக் செய்யும் கவர்கள் நிச்சயம் அதிக மைக்ரான்களால் தயாரிக்கப்படுவது இல்லை. கவரில் உள்ள டயாக்சின் (Dioxin) என்ற ரசாயனம் உணவோடு சூடாகக் கலக்கும்போது வயிற்றுக் கோளாறு, பசியின்மை, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும். தொடர்ந்து ஹோட்டல் உணவையே பார்சல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் மலட்டுத்தன்மை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். .பார்சல் உணவைப் பாதுகாப்பாய் மாற்ற...
அலுமினியம் ஃபாயில், பிளாஸ்டிக் கவர், பேப்பர் கப் என எந்த உணவு கவராக இருந்தாலும் அதில் ஐ.எஸ்.ஐ தர முத்திரை  உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். 40 மைக்ரான்கள் அடர்த்தி கொண்ட கவரில் பார்சல் செய்து தரும்படி கேட்கலாம். பிளாஸ்டிக் கவர்களிலேயே ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடிய கவர்கள் என பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. 40 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குக் கீழ் என்று உள்ள கவரை மட்டுமே ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீசரில் வைக்கலாம்.
ஹோட்டலில் பார்சல் வாங்கும் முன் சாப்பாட்டை, வாழை இலையில் கட்டித் தரச் சொல்லுங்கள். சாம்பார், ரசம், பொரியல் எனில் வாழை மட்டை, தென்னை மட்டை, பனை மட்டை, பாக்கு மட்டை என இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் பேக் செய்து தர வேண்டும் என  ஹோட்டல் உரிமையாளரிடம் கேளுங்கள்.அந்தக் காலத்தில் ஹோட்டலில் உணவு வாங்கும் போது சாம்பார், ரசத்துக்கு என டிபன் கேரியர் எடுத்துச்செல்வர். அதை இப்போதும் பின்பற்றினால் நல்லது.
பிளாஸ்டிக்கில் கவனம்
குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கும்போது பி.பி.ஏ ஃப்ரீ (BPA Free),  தாலேட்ஸ் ஃப்ரீ (Phthalates free) மற்றும் பி.வி.சி ஃப்ரீ (P.V.C free)  என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனிக்க  வேண்டும். அவெனில் (Oven) சமைக்க, எவ்வளவு பெரிய  பிராண்ட் தயாரிப்பாக  இருந்தாலும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது.  கண்ணாடிப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டுக்கு வாங்கும் தண்ணீர்  கேனின் எண் 2, 4, 5 என அச்சிடப் பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை நெருப்பிலிருந்தும், சூரிய ஒளியில் இருந்தும் தள்ளியே வைக்க வேண்டும். பிளாஸ்டிக்குக்குப் பதில் கண்ணாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பீங்கான், மண் பாத்திரம், இரும்புப் பாத்திரம், செம்புப் பாத்திரங்களைப்  பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் பயன்படுத்தினால் புற்றுநோய்?
சதீஷ், புற்றுநோய் சிறப்பு மருத்துவர்
'ஹோட்டலில் பேக் செய்து தரப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மிகவும் மட்டமான பிளாஸ்டிக்கை சேர்ந்தவை. சூடாகவோ, மிதமான சூடாகவோ உணவை பிளாஸ்டிக் கவரால் பேக் செய்தால் பிபிஏ என்ற கெமிக்கல் அதிக அளவில் வெளிவந்து உணவுடன் கலந்துவிடும். தொடர்ச்சியாக 1015 ஆண்டுகள் வரை  பிளாஸ்டிக் கவரிலோ, பாத்திரங்களிலோ சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். அதுபோல பிளாஸ்டிக் பாட்டிலை பல ஆண்டுகள் பயன்படுத்தினாலும் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உடலில் சேரும்போது ஹார்மோன்களின் இயக்கத்தில் மாற்றம் உண்டாகும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் சுரந்து மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் உண்டு. ஆண்களுக்கு எனில் ப்ராஸ்டேட் புற்றுநோய் வரலாம். அவெனில் சூடு செய்யும்போது பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் அதிக அளவில் உணவுவோடு கலக்கிறது, இதனால் ரத்தப் புற்றுநோய் வர வாய்ப்புகளும் அதிகம். சூடு செய்யாமல் லன்ச் பாக்ஸ் போல உணவை எடுத்து சென்றாலும், தொடர்ந்து பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம் என்பதால் மெல்ல மெல்ல பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உணவுடன் கலக்கும். ஆகவே, எந்த வகைகளிலும்  பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது நல்லது. ''
கண்ணாடியிலும் கவனம்
உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் பாது காக்கும் பிளாஸ்டிக் பைகளில் பிஸ்பீனால்-ஏ (Bisphenol-A) என்ற வேதிப்பொருள் கலந்திருக்கும். இது மூளை மற்றும் இனப்பெருக்க மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பிஸ்பீனால்-A பற்றிய விரிவான ஆராய்ச்சியை கனடா மேற்கொண்டு, பீஸ்பீனால் ஏ-யை பிளாஸ்டிக்கில் சேர்க்கத் தடை விதித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் சாம்பார் பொடி முதல் பேரீச்சம் பழம் வரை பீஸ்பினால் கலந்த பிளாஸ்டிக் பைகளில் அடைத்துத்தான் விற்கிறார்கள்.
ஜூஸ், பால் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களை அடைத்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு  பாலியோலெஃபின்ஸ் (Polyolefins) என்று பெயர். இதில்  பென்சோபீனோன் (Benzophenone) என்கிற ரசாயனம் இருக்கிறது. இது பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தைப் பாதித்து, மாதவிடாய்ப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
கண்ணாடிப் பாத்திரங்கள்தான் உணவைப் பதப்படுத்திவைக்க சிறந்தவையாக கருதப்பட்டு வந்தன. எனினும் சில நிறுவனங்கள் அதிகளவில் செறிவூட்டப்பட்ட உணவுப்பொருட்களைச் சேமித்து வைக்கும்பொருட்டு கண்ணாடிப் பாத்திரங்களில்  காரீயம் (led) கலக்கிறார்கள். இந்த காரீயம் உணவுப்பொருளில் கலந்து உடலில் சேரும்போது வாந்தி, கல்லீரல் பிரச்னை, சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கண்ணாடியிலும் கவனம் தேவை.
பு.விவேக் ஆனந்த்
பிளாஸ்டிக் ரகசியம்
ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளிலும் உள்ள குறியீடுகள் அதன் பிளாஸ்டிக் தன்மையை விளக்குகிறது.
1 Polyethylene terephtalate  (PETE or PET) -  தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள்.
2 High density polyethylene (HDPE) - பால் கேன், டிடர்ஜன்ட், பழச்சாறு பாட்டில்கள்.
3 Polyvinyl chloride (PVC) உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய் பாக்கெட் மற்றும் பாட்டில்கள். 
4 Low density polyethylene (LDPE) - மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர்
5 Polypropylene - தயிர் கப், யோகர்ட் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா.
6 Polystyrene/Styrofoam - மருந்து பாட்டில்கள், மின்விளக்கு ஸ்விட்ச்
7 எண் 1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தி இருப்பார்கள்.  சிடி, கணினி பகுதிகள், பேபி பாட்டில் போன்றவை இந்த பிளாஸ்டிக்கால் தயாராகின்றன. இதில் உணவுப் பொருட்களையும் சேமித்துவைக்கக் கூடாது.
   குறைந்த மோசமான பிளாஸ்டிக் எண்கள் -  2, 4, 5
   குறைந்த மோசமான பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது - 1
   மிகவும் மோசமான பிளாஸ்டிக் எண்கள் -  3, 6, 7

Friday, February 13, 2015

விக்கல் ஏன் வருகிறது?

பொதுவாக, விக்கல் வரும்போது அதை நிறுத்த அருகில் போய் பயமுறுத்துவோம். உடனே விக்கலும் நின்றுவிடும். பயமுறுத்துதல்தான் விக்கலுக்குத் தீர்வா? விக்கல் ஏன் வருகிறது? விக்கல் வந்தால், என்ன செய்ய வேண்டும்?
விக்கல் ஏன் வருகிறது?
“நெஞ்சுப் பகுதியையும் வயிற்றையும் பிரிக்கும் வகையில் உதரவிதானம் (Diaphragm) என்ற தசை இருக்கிறது.  அதில் ஏற்படும் துடிப்புதான் விக்கலாக நமக்குத் தெரிகிறது. அவ்வாறு துடிப்பு ஏற்படும்போது, நுரையீரல் சுருங்கி விரியும் செயல்பாட்டில், சிறு மாற்றம் உண்டாகி தொண்டையின் குரல் நாளம் வழியாக சத்தத்துடன் விக்கல் வருகிறது. உணவை வேகமாகச் சாப்பிடும்போதும், வயிறு நிரம்பச் சாப்பிடும்போதும், வாயுக்கள் நிறைந்த பானங்களை அருந்தும்
போதும், மது குடிக்கும்போதும் விக்கல் வருகிறது.  இது சில நிமிடங்கள் வரை நீடித்துவிட்டு, பிறகு நின்றுவிடும். இதற்குப் பயப்படத் தேவை இல்லை.”
பயமுறுத்தினால் விக்கல் நிற்பது ஏன்?
“பயமுறுத்தும்போது, அதிர்ச்சியில் சில நொடிகளுக்கு அனைத்து உள் உறுப்புகளும் ஒரு நிலையில் அதிர்வதால் நரம்பு மண்டல இயக்கம், சுவாசம், நுரையீரலின் இயக்கம் ஆகியவை நின்று மீண்டும் செயல்படுகின்றன.  இதனால் விக்கல் நிற்கிறது. ஆனால், இது சரியான முறை அல்ல. இதைப் பின்பற்றவும் கூடாது.”
தீர்வு?
“விக்கல் வரும்போது, மெதுவாக நீர் அருந்துவது, ஒரு ஸ்பூன் சர்க்கரையைச் சாப்பிடுவது, 10-20 நொடிகள் வரை மூச்சை இழுத்துப் பிடித்துவிட்டு, பின்பு, மூச்சை மெதுவாக வெளியிடுவது போன்ற செயல்களைச் செய்யலாம். ஆனால், தொடர்ந்து ஒரு நாளுக்கு மேல் விக்கல் வந்துகொண்டே இருந்தால், அதைச் சாதாரணம் என எண்ணி, கவனக்குறைவாக இருத்தல் கூடாது.
உணவுக்குழாயில் பிரச்னை, வயிறு தொடர்பான பிரச்னை,  நிமோனியா, மூளையில் கட்டி,  பின் மூளையில் பக்கவாதம் ஏற்படுதல், உடலில் சோடியத்தின் அளவு குறைதல், சிறுநீரகத்தில் குறைபாடு போன்ற பிரச்னைகளின் அறிகுறியாகவும் விக்கல் இருக்கலாம்.  எனவே, தொடர் விக்கலுக்கு மருத்துவரிடம் செல்வதுதான் சரி.
90 சதவிகித தொடர் விக்கல் பிரச்னைக்குக் குடல் தொடர்பான  பிரச்னைகளும், 10 சதவிகித தொடர் விக்கலுக்கு நரம்பு தொடர்பான  பிரச்னைகளும் காரண
மாக இருக்கலாம்.”

Thursday, February 5, 2015

நிறவெறியை வென்ற தமிழ்ப் பெண்!


நிறவெறியை வென்ற தமிழ்ப் பெண்!
ந வநீதம் பிள்ளை.. தென் ஆப்பிரிக்க தேசத்தின் முதல் பெண் நீதிபதியான இவர், தமிழ் வம்சாவளிப் பெண்!
நிறவெறி மிகுந்த தென் ஆப்பிரிக்காவில், இந்தியப் பெண்ணான இவர் நீதிபதியாக உயர்ந்ததே மாபெரும் சாதனைதான். இப்போது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக.. அகில உலகமும் ஆச்சர்யத்துடன் பார்க்கும் உயரத்தில் ஜொலிக்கிறார் இந்த நீதி தேவதை. சமீபத்தில், தன் முன்னோர்களின் ஜென்ம பூமியான இந்தியாவுக்கு வருகை புரிந்த நவநீதம் பிள்ளை, மீடியாக்களின் முக்கிய செய்தியானார்.
தன் வாழ்க்கை முழுக்கவுமே பல வேதனைகளை சந்தித்த இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தென் ஆப்பிரிக்காவில்தான். ஏழை குடும்பத்தில் ஒரு பஸ் டிரைவரின் மகளாகப் பிறந்த இவரை, உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் யுனிவர்சிட்டி வரை சென்று சட்டம் படிக்கச் செய்தது இவருடைய அம்மாதானாம்.
‘‘என் அம்மாவை என் தாத்தா பள்ளிக்கு அனுப்பவில்லை. எழுத, படிக்க தெரிந்து விட்டால், என் அம்மா யாருக்காவது காதல் கடிதம் கொடுத்து விடுவாரோ என்கிற பயம்தான் காரணமாம். தனக்கு நேர்ந்த கொடுமை எங்கள் நால்வருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அம்மா மிகுந்த கவனத்துடன் இருந்தார். பெண்களுக்கு கல்வியும் சுதந்திரமும் அவசியம் என்று அவர் நம்பியதால்தான், இன்று நான் இப்படி ஒரு பதவியில் வந்து உட்கார்ந் திருக்கிறேன்!’’ என்கிறபோது ஈரத்துடன் பளபளக்கின்றன அவர் விழிகள்!
1950-களில் வழக்கறிஞராக பணியாற்ற ஆரம்பித்தபோதே நிற வெறிக்கு எதிராக மிகுந்த உறுதியுடன் குரல் எழுப்பினார் நவநீதம் பிள்ளை. இதற்காக அப்போதைய தென் ஆப்பிரிக்காவை ஆண்ட வெள்ளையர்களால் இவர் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். ஒரு கட்டத்தில் இவருடைய பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது. அதற்கெல்லாம் அசந்து விடாமல் சட்டத்தின் மூலமே தன்னைத் தற்காத்துக் கொண்டதோடு, நிற வெறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடிவெள்ளியாகவும் விளங்கினார்.
‘‘நிற வெறிக்கு எதிராக 28 ஆண்டுகள் போராடினேன். சட்டக் கல்லூரியில் வெள்ளையர் அல்லாதவர்களுக்கான தனி வகுப்பறையில் படித்துத்தான் சட்டம் முடித்தேன். ஒரு வக்கீலாக, கோர்ட்டில் பிறரின் உரிமைகளுக்காக வாதாடிய சமயத்திலும்கூட, நான் வெள்ளையர்களில் ஒருத்தி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நீதிபதியின் அறைக்குள் நுழைகிற உரிமை எனக்குத் தரப்படவில்லை.. ஆனால், அந்த வலிகளெல்லாம்தான் எனக்கு வலிமை தந்தது’’ என்று தன் வாழ்நாளின் கறுப்புப் பக்கங்களை கசப்போடு திரும்பிப் பார்க்கிறார் நவநீதம் பிள்ளை.
1992-ல் தன்னுடன் வேலை பார்த்த சக வழக்கறிஞர்கள் இருவர் துணையுடன் ‘இக்வாலிட்டி நவ்’ என்ற பெண்களுக்கான மனித உரிமை அமைப்பை தோற்றுவித்து பெண்களின் நலனுக்காகவும் போராடி வருகிற இவர், கறுப்பு இன மக்களின் மனதில் எவரெஸ்ட்டாக உயர்ந்து நிற்கிறார்.
‘‘இந்த சாதனைக்குப் பின்னால் நிச்சயம் என் கணவர் பரஞ்ஜோதியின் பங்கு இருக்கிறது. அவரும் வக்கீல்தான். நிற வெறிக்கு எதிராக அவர் வாதாடியதால் ஐந்து மாதங்கள் சிறையில் தள்ளப்பட்டார்.. இப்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும் என் மனதிலும் நினைவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்’’ என்று உணர்வுபூர்வமாக நினைவுகூர்கிறார் தன் கணவரை.
‘‘ஒரு காலத்தில் வெள்ளையர்கள் எங்களை ‘பிளாக் பியூட்டி’ என்று அழைத்தனர். ஆனால், குதிரைகளைத்தான் அப்படி அழைப்பார்கள் என்று தெரிய வந்தபோது அந்த வார்த்தையையே நான் வெறுத்தேன். அப்படி, அவர்களின் ரத்தத்திலேயே கலந்திருக்கும் நிறவெறிக்கு என் வாழ்நாள் காலத்திலேயே ஒரு முற்றுப்புள்ளி வரும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இப்போது உள்ள குழந்தைகளுக்கு நிறவெறி என்றால் என்ன என்று கூட தெரியவில்லை. அதுதான் எங்களின் வெற்றி..’’ என்று கண்களை மூடி மெதுவாக சிரிக்கிறார் இந்த 66 வயதான நீதிபதி.
நீதி என்றும் யாருக்கும் மறுக்கப் படுவதில்லை!