Friday, January 30, 2015

ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்

ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்

தமிழ் ஆண்டுகள் அறுபது எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுகளுக்குப் பெரும்பான்மையாக சமசுகிருதம் எனும் வடமொழிப் பெயர்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பிரபவ எனும் ஆண்டில் தொடங்கி அகூய என்று முடியும்படியாக ஒவ்வொரு ஆண்டுக்கும் வடமொழிப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.இதில் முதல் இருபது ஆண்டுகள் உத்தம ஆண்டுகள் என்றும், அடுத்த இருபது ஆண்டுகள் மத்திம ஆண்டுகள் என்றும், கடைசி இருபதுஆண்டுகள் அதம ஆண்டுகள் என்றும் அழைக்கப் பெறுகின்றன.

இந்த வடமொழிப் பெயர்களுக்குச் சரியான தமிழ்ப் பெயர் உங்களுக்குத் தெரியுமா?

தெரியவில்லையே என்று கலங்க வேண்டாம். உங்களுக்காகவே, வடமொழிப் பெயர்களும் அதற்கு இணையான தமிழ்ப் பெயர்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வடமொழிப் பெயர் -தமிழ்ப் பெயர்

பிரபவ -நற்றோன்றல்

விபவ -உயர்தோன்றல்

சுக்கில-வெள்ளொளி

பிரமோதூத-பேருவகை

பிரசோத்பத்தி-மக்கட்செல்வம்

ஆங்கீரச-அயல்முனி

சிறிமுக-திருமுகம்

பவ- தோற்றம்

யுவ-இளமை

தாது-மாழை

ஈசுவர-ஈச்சுரம்

வெகுதானிய-கூலவளம்

பிரமாதி-முன்மை

விக்ரம-நேர்நிரல்

விச-விளைபயன்

சித்திரபானு-ஓவியக்கதிர்

சுபானு-நற்கதிர்

தாரண-தாங்கெழில்

பார்த்திப-நிலவரையன்

விய-விரிமாண்பு

சர்வசித்த-முற்றறிவு

சர்வதாரி-முழுநிறைவு

விரோதி- தீர்பகை

விகிர்தி-வளமாற்றம்

கர-செய்நேர்த்தி

நந்தன-நற்குழவி

விசய-உயர்வாகை

சய-வாகை

மன்மத-காதன்மை

துன்முகி-வெம்முகம்

ஏவிளம்பி-பொற்றடை

விளம்பி-அட்டி

விகாரி-எழில்மாறல்

சார்வரி-வீறியெழல்

பிலவ-கீழறை

சுபகிருது-நற்செய்கை

சோபகிருது-மங்கலம்

குரோதி-பகைக்கேடு

விசுவாவசு-உலகநிறைவு

பராபவ-அருட்டோற்றம்

பிலவங்க-நச்சுப்புழை

கீலக-பிணைவிரகு

சவுமிய-அழகு

சாதாரண-பொதுநிலை

விரோதி கிருது-இகல்வீறு

பரிதாபி-கழிவிரக்கம்

பிரமாதீச-நற்றலைமை

ஆனந்த-பெருமகிழ்ச்சி

இராட்சச-பெருமறம்

நள- தாமரை

பீங்கள-பொன்மை

காளயுக்தி-கருமைவீச்சு

சித்தார்த்தி-முன்னியமுடிதல

ரவுத்ரி-அழலி

துன்மதி-கொடுமதி

துந்துபி-பேரிகை

உருத்ரோத்காரி-ஒடுங்கி

இரக்தாட்சி-செம்மை

குரோதன்-எதிரேற்றம்

அட்சய-வளங்கலன்

Friday, January 23, 2015

பழந்தமிழரின் அளவை முறைகள்

                                                 பழந்தமிழரின் அளவை முறைகள்

தமிழறிந்தவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

எண் வாய்பாடு

10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்
10பூரியம் - 1 முக்கோடி
10 முக்கோடி - 1 மகாயுகம்

மேல்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள்

மேலரை(அரை)
மேற்கால்(கால்)
மேலரைக்கால்(அரைக்கால்)
மேல்வீசம்(வீசம்)
3/4 - முக்கால்
1/2 - அரைக் கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒரு மா
3/64 - முக்கால் வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
மேல்வாய்ச் சிற்றிலகத்தில் அடிமட்ட எண், மேல்முந்திரி /முந்திரி = 1/320 ஆகும்.

கீழ்வாயிலக்கம் ( கீழ்வாய் இலக்கத்தின் எண்மதிப்பு - கீழ்வாய் இலக்கத்தின் பெயர்)
1/640 - கீழரை
1/280 - கீழ்க்கால்
1/2560 - கீழரைக்கால்
1/5120 - கீழ் வீசம்
1/102400 - கீழ் முந்திரி
1/1075200 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த் துகள்

இம்மி என்பது மிகச் சிறிதான மத்தங்காய்ப் புல்லரிசி. அது எள் தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையை உணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று, இம்மி யென்னும் பெயர் தோன்றியிருக்கலாம்.

எண் கூற்று வாய்ப்பாடு
1 இம்மி - 11 மும்மி
11 மும்மி - 7 அணு
1 அணு - 9 குணம்
1 குணம் - 5 பந்தம்
1 பந்தம் - 6 பாகம்
1 பாகம் - 7 விந்தம்
7 விந்தம் - 17 நாகவிந்தம்
1 நாகவிந்தம் - 60 வெள்ளம்
1 குரல்வளைப்படி - 60 வெள்ளம்
1 வெள்ளம் - 100 நுண்மணல்

நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும்.
1. மணித்தராசு - இது இரத்தினம் முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறிய தராசு
2. பொன் தராசு - தங்கம் போன்றவைகளை நிறுக்கும் சிறு தராசு
3. உலோகத் தராசு - செம்பு, பித்தளை முதலியவற்றை நிறுக்கும் பெருந் தராசு
4. பண்டத் தராசு - பலசரக்குகளை நிறுக்கும் தராசு
5. கட்டைத் தராசு - விறகு அல்லது மூட்டைகளை நிறுக்கும் தராசு. இது இரு புறமும் சதுர மரப்பலகைகளைத் தட்டுக்களாகக் கொண்டிருக்கும்.
6. தூக்கு - காய்கறிகளை நிறுக்கும் தராசு. இது மரக்கம்பாலான துலாக் கோலின் ஒரு பக்கத்தில் மட்டும் தொங்கும் கூடைத் தட்டால் ஆனது.

அளவைகள்

உளுந்து (grain) - 65 மி. கி.
குன்றிமணி - 130 மி. கி.
மஞ்சாடி - 260 மி.கி.
மாசம் - 780 மி.கி.
பனவெடை - 488 மி.கி
வராகனெடை - 4.2 கி.
கழஞ்சு - 5.1 கி.
பலம் - 41 கி. (35 கி.)
கஃசு அல்லது கைசா - 10.2 கி.
தோலா - 12 கி.
ரூபாவெடை - 12 கி.
சேர் - 280 கி.
வீசை - 1.4 கி.கி.
தூக்கு - 1.7 கி.கி.
துலாம் - 3.5 கி.கி.

பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு
பொன் அதிகமாக இருப்பினும், இந்த அளவையே பின்பற்றப்பட்டது.
32 குன்றிமணி = 1 வராகன் = 1.067 கிராம்
10 வராகனெடை = 1 பலம் = 10.67 கிராம்
8 பலம் = 1 சேர் = 85.33 கிராம்
5 சேர் = 1 வீசை = 426.67 கிராம்
1000 பலம் = 1 கா = 10.67 கிலோகிராம்
6 வீசை = 1 துலாம் = 2.560 கிலோகிராம்
8 வீசை = 1 மணங்கு 3.413 கிலோகிராம்
20 மணங்கு = 1 கண்டி (பாரம்) = 68.2667 கிலோகிராம்


நிலவளவை
இது குழிக்கணக்கு எனப்படும். அவை வருமாறு;-
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்
20 மா = 1 வேலி
1 மரக்கால் வேலைபாடு (நெல் நடவுக்கு தேவையான விதைகள்) - 8 சென்ட்
12.5 மரக்கால் வேலைபாடு - 100 சென்ட் - 1 ஏக்கர்
40 மரக்கால் = 1 புட்டி
1 குழி - 100 சதுர அடி
1 மா - 100 குழி (10000 சதுர அடி)
1 காணி - 4 மா (40000 சதுர அடி = 92 சென்ட் = 0.92 ஏக்கர்) - 400 குழி
1 வேலி - 7 காணி (6.43 ஏக்கர் = 2.6 ஹெக்டர்)
1 பர்லாங்கு - 220 கெசம் (660 அடி)
1 நிலம் (ground) - 2400 சதுர அடி - 5.5 சென்ட் - 223 சதுர மீட்டர்

நாணயம்
1 பல் - 0.9 உளுந்து (கிரைன்)
8 பல் - 1 செங்காணி (செப்பு) - 7.2 உளுந்து (கிரைன்)
0.25 செங்காணி - 1 கால் காணி - 1.8 உளுந்து (கிரைன்)
64 பல் - 1 காணப்பொன் (காசுப்பணம் (பொன்)) - 57.6 உளுந்து (கிரைன்)
1 இரோமானிய தினாரியம் 2 காணப்பொன்னுக்கும், 1 செங்காணிக்கு கொடுத்து வர்த்தகம் செய்யப்பட்டது - 124 உளுந்து (கிரைன்)
12 பை - 1 அணா
16 அணா - 1 ரூபாய்

பிற்கால நாணய அளவை
1 அணா - 3 துட்டு
1/4 அணா - 3/4 துட்டு
4 அணா - 25 பைசா
8 அணா - 50 பைசா பணம் - வெள்ளிக்காசு துட்டு - செப்புக்காசு

Friday, January 16, 2015

மஞ்சளின் மருத்துவ குணம்

                                          மஞ்சளின் மருத்துவ குணம்

பொங்கல் பண்டிகையில் முதன்மைப் பொருள், மஞ்சள். மங்களகரமான மஞ்சளில் மருத்துவ குணங்களும் அதிகம்.  சித்த மருத்துவத்தில் குணப்படுத்தப்படும், ஆயிரக்கணக்கான நோய்களில், 60க்கும் மேற்பட்ட நோய்கள் மஞ்சளால் குணப்படுத்தப்படுகின்றன. மஞ்சள் ஒரு நுண்ணுயிர்க்கொல்லி, நச்சு எதிர்ப்புப் பொருள் என்பதால் விவசாயத்திலும் பயன்படுகிறது. கிடைக்க அரிதான கருமஞ்சள், காயகல்ப மருந்தாகப் பயன்படுகிறது.

http://www.vikatan.com/doctor/2015/02/njzlzm/images/dot(4).jpg பசுஞ்சாண நீரில் ஊறவைத்து, உலரவைத்துப் பொடித்த மஞ்சள் சமையலுக்கும், நல்லெண்ணெயில் ஊறவைத்து, உலரவைத்துப் பொடித்த மஞ்சள், சருமத்துக்கும் பயன்படுகிறது.
http://www.vikatan.com/doctor/2015/02/njzlzm/images/dot(4).jpg மெட்ராஸ் வந்தால், தூயவெள்ளைத்துணியை மஞ்சள் கலந்த நீரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, கண்களில் அடிக்கடி ஒற்றி எடுத்தால், கண்வலி, நீர்கோத்தல் தீரும்.
http://www.vikatan.com/doctor/2015/02/njzlzm/images/dot(4).jpg மஞ்சளைச் சுட்டு, புகையை மூக்கில் இழுத்தால் தலைபாரம், நீர்க்கோவை, தலைவலி, தும்மல், நீர்வடிதல், மூக்கடைப்பு, தொண்டைப்புண் மற்றும் கிருமித்தொற்று போன்ற நோய்கள் குணமாகும்.
http://www.vikatan.com/doctor/2015/02/njzlzm/images/dot(4).jpg மர மஞ்சளின் சாறு 200 மி.லி அளவு எடுத்து, தேன் கலந்து, ஒரு நாளைக்கு 2 வேளை என, ஒரு வாரம் தொடர்ந்து குடித்துவர, மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.  
http://www.vikatan.com/doctor/2015/02/njzlzm/images/dot(4).jpg அரை லிட்டர் நீரில் கைப்பிடியளவு மஞ்சளைச் சேர்த்து, 200 மி.லி அளவுக்குக் காய்ச்சி, தேன் அல்லது அரிசி கழுவிய நீருடன் கலந்து, 2 வேளை குடித்துவர வெள்ளைப்படுதல், பெரும்பாடு நோய் குணமாகும்.
http://www.vikatan.com/doctor/2015/02/njzlzm/images/dot(4).jpg 2 கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி மஞ்சள் கலந்து, கொதிக்கவைத்து, அரை கப் அளவாகக் குறுக்கியதும், வடித்துக் குடித்தால், பிரசவித்த பெண்களின் வயிற்றில் ஏற்பட்ட, நச்சு நீர்க்கட்டுக்களை வெளியேற்றும்.
http://www.vikatan.com/doctor/2015/02/njzlzm/images/dot(4).jpg பசுமஞ்சள் சாறுடன், நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட, அடிக்கடி நீர் பிரிவது கட்டுப்படும். இரண்டு பொடிகளையும் சமஅளவு கலந்து, அரை கிராம் அளவுக்கு சாப்பிட்டாலும் சரியாகும்.
http://www.vikatan.com/doctor/2015/02/njzlzm/images/dot(4).jpg பூசு மஞ்சளை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தோல் நோய் அண்டாது.
http://www.vikatan.com/doctor/2015/02/njzlzm/images/dot(4).jpg கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள், வேப்பிலை, துளசி, ஓமம் சிறிது கற்பூரம் சேர்த்து நன்றாக ஆவிபிடிக்கலாம். சளி, இருமல், தலைபாரம் நீங்கும்.



Friday, January 9, 2015

ஆலமரத்தின் அடியில் ஊர்க்கூட்டம் ஏன்?

ஆலமரத்தின் அடியில் ஊர்க்கூட்டம் போடுவது ஏன் என்று தெரியுமா?
இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும் ஒவ்வரு ஆலமரமும் மிகப் பழமையாக பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை.
பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம் நடத்தபடுவதில்லை , மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும் .தியானம் கூடிவிடும் .இது அனுபவ பூர்வமான உண்மை.
இம்மரத்தின் அடியில் தவம் இருப்பவர்களுக்கு ஞானம் பெற்றுத் தருவதில் ஆல மரத்துக்குத் தனி மகிமை உண்டு. இந்த மரத்தடியில் ஊர்கூட்டம் நடத்தினால் மக்கள் அமைதியாக உணர்ச்சிவசப்படாது இருப்பார் என்று நம் முனோர் அறிந்திருந்தனர் .
ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.
ஆலமரத்தின் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகிறது.
கனிகளை உலர வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம் திடப்படும். ஞாபகமறதி நீங்கும்.உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழம் மொழி. ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தால் பற்களும் ஈறுகளும் வலிமை பெறும்.
பூக்கள்:
பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரை சேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும்.
விழுதுகள்:
தளர்ச்சியான மார்பகங்கள் சீர்படவும், கவர்ச்சி பெறவும் பயன்படுகின்றன. விழுதுகளின் தலைப்பகுதியில் மஞ்சளும், சிவப்பும் கலந்துள்ள பகுதிகளை எடுத்து அரைத்து மார்பகங்கள் மீது பூசினால் வளர்ச்சி பெறும். ஆலம் விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாப்பிட்டால் நீர்த்த இந்திரியம் கெட்டிப்படும்.
இலைகள்:
ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து நன்றாக அரைத்துச் சம அளவு கலந்து, மாதவிலக்குப் பிரச்னைகளுக்கும், வெள்ளைப்படு நோய்க்கும் தரப்படும் சிறந்த மருந்தாகும்.
ஆலமரத்து வேர்ப்பட்டை 12 கிராம் அளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமிட்டுக் குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய் குணம் பெறுகிறது.
சர்க்கரை நோய், காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம், உடலுறவின் போது வெகு சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், புண், அதிக மாதவிடாய், இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.இம்மரத்தின் வேர் மீது உள்ள பட்டையை வெட்டி எடுத்துக் . இதைப் பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம்.
வெட்டை நோயைக் குணப்படுத்த புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வரலாம். மேலும், ஆண்களுக்கு ஏற்படும் துரிதஸ்கலிதம் நோயும் வெட்டை குணம்பெறும்.
புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும். கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.
மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றைக் குடிப்பதன் மூலம் சீதபேதியைக் குணப்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக மாதவிடாய்க் கழிவதையும் இது தடுத்து நிறுத்துகிறது.
கனிகளை நன்றாக உலர்த்தி, அரைத்து, 12 கிராம் அளவு பாலில் கலந்து கொடுக்கலாம். ஞாபக மறதியைப் போக்கவும் இந்திரியத்தைத் திடப்படுத்தவும் இவை மிகவும் உதவுகின்றது. கனியை நிழலில் உலர்த்தி பவுடராக்கி, சம அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை 5 கிராம் அளவில் கொடுத்து வந்தால் மூலம், சிறுநீர்ப்பை சம்பந்தமான குறைபாடுகள் குணப்படுகின்றது.
வெட்டை, மூலம், ஞாபக மறதி, இருமல், ஈறு வீக்கம், பேதியைக் கட்டுப்படுத்த பட்டை பயன் அளிக்கிறது.
ஆல மர விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரையில் உண்ணக் கொடுக்கலாம். இதன் மூலம் இந்திரியம் தீர்த்துப் போதல், இந்திரியப் போக்கு போன்றவை குணப்படுகிறது.
ஆலமர விழுதுகளின் மெல்லிய இலைகள் ஆறு கிராம் அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து வடிகட்டி அதில் வெண்ணெய் கலந்து குடிக்கச் செய்தால் வாந்தி நின்றுவிடும். ஆலமர விழுதுகளை எரித்து தண்ணிரில் சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் தெளிந்த நீரைக் குடிப்பதால் வாந்தி கட்டுப்படுகிறது.
ஆலமர இலைகளைக் கஷாயமிட்டு, அதனைப் பாகுபோல் செய்துகொண்டு சாப்பிடுவதால் இந்திரியத்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து போதல், ஞாபக மறதி நோய், கிரந்தி நோய்கள் குணப்படுகிறது.
ஆல இலைகளை எரித்து அதன் சாம்பலை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடுவது தவறான உடல் உறவினால் வரும் வெட்டை நோய்க்கு நிவாரணமாக அமைகிறது.
ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இது காது, மூக்கு, பல் நோய்கள், சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்க பயன் தருகிறது.
ஆலமரத்துப் பாலையும், எருக்கம்பாலையும் சம அளவில் கலந்து புண்களின் மீது வைத்துப் பூசுவதனால் புண்கள் ஆற விடுகின்றது.
வீட்டுக்கு ஒரு ஆல மரத்தை வளர்த்தால் அல்லது தெருவுக்கு , ஊருக்கு ஒரு ஆலமரத்தை வளர்த்தால் குளுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும், மனப் பதட்டம் நீங்கி மனதிற்கு அமைதியும் கிடைக்கும்.
நன்றி
தமிழும் சித்தர்களும்.