Friday, June 5, 2015

ஆர்கானிக் அழகுப்பொருட்கள்

ஆர்கானிக் அழகு ஷாப்பிங்
ர்கானிக் பொருட்களின் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகுப்  பொருட்களும், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு சந்தையில் சக்கைப்போடு போடுகிறது. பக்கவிளைவுகள் அற்ற, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய  இந்த ஆர்கானிக் அழகுப் பொருட்கள் உங்களை மேலும் அழகாக்கட்டும்.
ஹேர் ஆயில்: 200 மி.லி விலை ரூ350/-
நெல்லிக்காய் மற்றும் வல்லாரை இலைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள ஹேர் ஆயில். அடிக்கடி முடி கொட்டும் பிரச்னை இருப்பவர்கள், இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். தலையில் நன்றாகத் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து, இளஞ்சூடான நீரில் தலைக்குக் குளிப்பது நல்லது.
ரூம் ஸ்ப்ரே:300 மி.லி - விலை ரூ160/-
எலுமிச்சையும் சில ஆயுர்வேத மூலிகை எண்ணெயும் கலந்த ஸ்ப்ரே இது. இந்த ஸ்ப்ரே அடித்தால், நல்ல நறுமணம் கிடைப்பதுடன், அறையில் இருக்கும் பாக்டீரியா நுண்
கிருமிகளும் அழியும்.
வெட்டிவேர் ஸ்க்ரப்: விலை - ரூ35/-
உடலைத் தேய்த்துக் குளிக்க பிளாஸ்டிக் நார்களைப் பயன்படுத்துவதைவிட, வெட்டிவேரில் செய்யப்பட்ட இந்த ஸ்க்ரப் உடலில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, புத்துணர்வு தரும்.
ஃபேஸ் வாஷ் 120 மி.லி - விலை ரூ295/-
வேம்பு, மஞ்சள் கலந்த ஃபேஸ்வாஷ் ஜெல் இது. அனைவரும் பயன்படுத்தலாம். குளிக்கச் செல்வதற்கு முன்பு, சிறிதளவு ஜெல்லை எடுத்து, முகத்தில் தடவி, இரண்டு நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு, தூய நீரால் கழுவி, சுத்தமான துணியால் முகத்தை  மென்மையாக ஒத்திஎடுக்கவும்.  வறண்ட சருமமா, எண்ணெய் சருமமா  என உங்களது சரும வகையைத் தெரிந்து கொண்டு, மருத்துவரின் ஆலோசனை  பெற்று, இந்த ஜெல்லைப் பயன்படுத்தலாம்.
மவுத் ஃப்ரெஷ்னர்: விலை - ரூ100/-
நெல்லிக்காய், சீரகத்தை நன்றாகக் காயவைத்துப் பொடித்துச் செய்யப்பட்ட மவுத் ஃப்ரெஷ்னர் இது. உணவு உண்டதும், சிறிதளவு வாயில் போட்டு மென்றால், வாய், புத்துணர்ச்சியாக இருக்கும்.  உடலுக்கும் நல்லது.
லிப் பாம்: விலை - ரூ195/-
நெய், வெண்ணெய், பாதாம் எண்ணெய், அப்ரிகாட் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது இந்த லிப் பாம். உதடு வெடிப்பால் அவதிப்படுபவர்கள், உதடு வறட்சியால் பாதிக்கப்படுவர்கள் இந்த லிப் பாம் பயன்படுத்தலாம்.  நல்ல தீர்வைத் தரும்.
ஆன்டிஏஜிங் பவுடர்: விலை - ரூ150/-
துளசி இலையால் தயாரிக்கப்பட்ட இந்த பவுடரைத் தூய நீரில் கலந்து பேஸ்ட்டாக்கவும். இதனை, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். இளம் வயதிலேயே தோல் சுருங்கி, முதிய தோற்றம் அடைந்தவர்களுக்கு இந்த பவுடர் நல்ல பலனைத் தரும். 
முல்தானிமட்டி சோப்: விலை - ரூ60/-
வெறும் முல்தானிமட்டியைக் கொண்டு செய்யப்பட்டது.  முல்தானிமட்டி தோலில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, பொலிவாக்கும். 
ஃபேஸ் பேக் : விலை - ரூ35/-
வெட்டிவேர், கஸ்துரி மஞ்சள், ஆரஞ்சு எண்ணெய் கலந்து பொடித்த பவுடர் இது. தயிர் அல்லது பன்னீரில் இந்த பவுடரைக் கலந்து, முகத்தில் பேக் போட வேண்டும். நன்றாகக் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். முகம் மலர்ச்சி பெறும். அழகு கூடும்.
வேப்பமர சீப்பு விலை - ரூ160/-
வேப்பமரப் பட்டைகள் மூலம் செய்யப்பட்ட சீப்பு இது. இந்த சீப்பு பயன்படுத்துவதன் மூலம், முடியில் பூஞ்சைத் தொற்று, பேன், பொடுகு  வருவதற்கான வாய்ப்பு குறையும்.
ஆயுர்வேதிக் காஜல்: விலை - ரூ350/-
நெய், ஆமணக்கு எண்ணெய், பாதாம் எண்ணெய், தேன் ஆகியவை கலந்த கண் மை இது. கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
குளியல் எண்ணெய் விலை - ரூ85/-
கருந்துளசி, எலுமிச்சை, பெருஞ்சீரகம், ஆமணக்கு போன்ற எண்ணெய்கள் கலந்த நறுமண எண்ணெய் இது.  குளிக்கும்போது, ஒரு வாளியில்  தண்ணீர் நிரப்பி இரண்டு மூன்று சொட்டு இந்த எண்ணெயைவிட்டு   இரண்டு நிமிடங்கள் கழித்து குளிக்கவும். உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழியும்.   டியோடிரன்ட், சென்ட் போடத் தேவையே இல்லாத அளவுக்கு உடலில் நறுமணம் வீசும். 
குர்குமா  சோப்: விலை - ரூ100/-
மஞ்சள், வெட்டிவேர், ஆரஞ்சு இவற்றால் தயாரிக்கப்பட்டது. உடலுக்கு நல்ல நறுமணம் தருவதுடன், சரும ஆரோக்கியத்துக்கும் நல்லது.

Friday, May 15, 2015

ஒரு டீ சொல்லேன்...



டீ குடிக்கலாம் என்று ஹோட்டல் சென்றால், “டீயா காபியா’’ என்று கேட்ட காலம் போய், “கிரீன் டீயா, வொயிட் டீயா” எனக் கேட்டு, கலர் கலராய் டீ விற்கத் தொடங்கிவிட்டார்கள். நாம் வழக்கமாகச் சாப்பிடும் டீ, ‘டஸ்ட் டீ’ வகையில் வரும். டீ வகைகளில் உடலுக்கு எந்த நலனையும் தராத டீ இது. டீயில் என்னென்ன வகைகள்கள் உள்ளன? எந்த டீயை நம்பிச் சாப்பிடலாம்?
வொயிட் டீ
இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். தேயிலைச் செடியின் இளந்தளிர்களைப் பறித்துத் தயாரிக்கப்படுவதால், இந்த டீ புதுமையான சுவையுடன் இருக்கும். லேசான இனிப்புச் சுவையுடன் இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இதில், பாலிபினால்ஸ் என்கிற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து இருப்பதால், புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திறன் கிடைக்கும். இதில், ஃப்ளோரைடு அதிகம் இருப்பதால், பற்சிதைவு மற்றும் பற்குழி போன்ற பிரச்னைகள் வராமல் காக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, கிருமித் தொற்றுப் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.
கிரீன் டீ
இதில் அதிக அளவு பாலிபினால்ஸ் இருக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சில புற்றுநோய்கள் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
ஓலாங் டீ
பழங்கள், மல்லிகை போன்ற பல நறுமணங்களில் கிடைக்கிறது. வைட்டமின்கள், தாமிரம், செலினியம், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும். எலும்புகள் உறுதி அடையும். அலர்ஜி, பற்கள் தொடர்பான பிரச்னைகள் வராது. புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும். சர்க்கரை நோயாளிகள் இந்த டீயைக் குடிக்கலாம்.
ஐஸ் டீ
பிளாக், ஓலாங், வொயிட், கிரீன் போன்ற டீ வகைகளை, ஐஸ் டீயாகவும் தயாரிக்கலாம். டீயைத் தயாரித்துவிட்டு, ஃபிரிட்ஜில் வைத்துவிடவும். இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, மூன்று துளசி இலைகள், தர்பூசணி, திராட்சை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சுப் பழத்துண்டுகள் - சிறிதளவு, மூன்று ஐஸ் கட்டிகளை, ஃபிரிட்ஜில் வைத்த டீயுடன் கலந்தால், மணமும் சுவையும் மிக்க ஐஸ் டீ தயார். வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து உள்ளதால், ஒரு நாளுக்குத் தேவையானப் புத்துணர்வு ஒரு கப் டீயில் கிடைக்கும்.
மூலிகை டீ
துளசி, புதினா, ரோஸ்மெரி, செம்பருத்தி, ரோஜா இதழ்கள், ஆவாரம் பூ, மல்லிகை, லாவண்டர், ஏலக்காய், லெமன் கிராஸ், இஞ்சி போன்றவற்றைக் கலந்து, மூலிகை டீ தயாரிக்கலாம். குமட்டல், தலைவலி, இருமல், சளி போன்ற தொல்லைகள் தீரும். புத்துணர்வைத் தரும். கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்கள் அண்டாது. நீண்ட, ஆழமான தூக்கம் கிடைக்கும். வயிறு மற்றும் செரிமான இயக்கங்களுக்கு மிகவும் நல்லது. நல்ல மனநிலையைத் தரும். நரம்பு மண்டல இயக்கத்தைச் சீராக்கும். தலைவலி குணமாகும். உள்ளுறுப்புகளில் இருக்கும் கழிவுகள் வெளியேறும்.
காபி
சிக்கரி என்பது ‘கெஃப்னைன் ஃப்ரி’ மூலிகை.  இது காபியில் சேர்க்கப்படும் மூலப்பொருள். காபி கொட்டையில் க்யூனைன் (Quinine) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், தலைவலியைப் போக்கும். நல்ல மனநிலையைத் தரும். பால் சேர்க்காமல் அளவாகக் குடித்தால், குடலில் வாழும் கெட்ட நுண்ணுயிரிகள் அழியும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். ஈரலைப் பலப்படுத்தும்.
எப்போது காபி குடித்தாலும், சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம். கருப்பட்டி, தேன் சேர்த்த காபியே சிறந்தது. நல்ல புத்துணர்ச்சி உடனடியாகக் கிடைக்கும். அடிக்கடி குடிக்காமல், ஒருநாளைக்கு ஒருமுறை எனக் குடிப்பது ஆரோக்கியமான பழக்கம்.
பிரத்யேக சுவையுடன் காபி கடைகளில் கிடைக்கக்கூடிய காபி வகைகளை அளவாக எப்போதேனும் குடிக்கலாமே தவிர, தினமும் குடிக்கக் கூடாது. வெவ்வேறு சுவைகளிலும் தயாரிப்புகளிலும் கிடைக்கும், காப்பசினோ, எஸ்பிரஸ்ஸோ போன்ற காபிகள், சுவையை அள்ளித்தந்தாலும் நல்ல பலன்கள் அதில் இல்லை. 
ஶ்ரீமதி வெங்கட்ராமன்கிளினிகல் நியூட்ரிஷியன்

Friday, May 1, 2015

நீரின்றி அமையாது உடல்...

நீரின்றி அமையாது உடல்...
 ராஜ்குமார்பொது மருத்துவர்
ணவு, உடை, உறைவிடம் இல்லாவிட்டாலும் உயிர் வாழ முடியும். ஆனால், நீர் இல்லாமல் ஒரு சில நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. ஒருநாள் தண்ணீர் குடிக்காவிட்டால்கூட, உடல் சோர்ந்துபோகும். ஏனெனில், நமது உடல் 60 சதவிகிதம் திரவத்தால் ஆனது. உடல் முழுவதும் இருக்கும், உட்புற மற்றும் வெளிப்புற செல்கள் திரவத்தால்  சூழப்பட்டிருக்கும். இந்தத் திரவம், வற்றாமல் எப்போதும் ஈரத்தன்மையுடன் இருக்க தண்ணீர் அவசியம்.
செல்களின் கவசம்: தண்ணீரின் அளவு உடலில் குறைந்தால், செல்களில் உள்ள ஈரப்பதத்தை உடல் எடுத்துக்கொள்ளும். பிறகு, நீர் பற்றாக்குறையால் சரும வறட்சி, உள்ளுறுப்புகள் பாதிப்பு போன்ற பிரச்னைகள் உண்டாகும். நாம் சாப்பிடும் உணவில் இருந்து, ஊட்டச்சத்துக்களை உடலில் உள்ள செல்களுக்குத் தந்து, அதன் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தத் தண்ணீர் உதவுகிறது. 
  
சிறந்த நச்சு நீக்கி: வியர்வை, மலம், சிறுநீர் வழியாக உடல் சுத்தம் செய்யப்படுகிறது. இதற்குத் தண்ணீர் மிகவும் அவசியம். சாப்பிட்ட உணவைச் செரித்து, ஊட்டச்சத்துக்களைக் கிரகித்து, கழிவுகளை வெளியேற்றும் பணியை கல்லீரல், சிறுநீரகம் செய்கின்றன. உணவை நகர்த்திச் செல்லவும், உணவை செரிக்கவும் வைக்கும் செயல்முறைக்குத் தண்ணீர் அவசியம். போதுமான அளவு நீர் அருந்தாவிடில், மலச்சிக்கல், வாயுத் தொல்லை, நீர்க்கடுப்பு, அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்னைகள் உண்டாகலாம்.
சமநிலைக்கு: மாறுகின்ற வானிலைக்கு ஏற்ப, உடலின் வெப்பம் மாறுபடும். உடலின் அதிகப்படியான வெப்பத்தை வியர்வை மூலம் உடல் தணித்து, குளிர்ச்சித் தன்மையை தக்க வைத்துக்கொள்கிறது. அதிகப்படியான வியர்வை வெளியேறும்போது நீர் வறட்சி (Dehydration) ஏற்படும். இதனால், உடலின் ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படும். எனவே, உடலின் தண்ணீரைக் கவனிப்பது அவசியம்.
சரும பொலிவுக்கு: சருமம் சுவாசிக்கத் தண்ணீர் அவசியம்.  ஏ.சி அறையிலேயே இருப்பவர்களுக்குத் தாகம் எடுக்காததால், சிலர் நீர் அருந்தாமலே இருப்பார்கள். இதனால், சருமம் களையிழந்து, உதடு வறண்டு போகும். இது, உடலில் போதுமான அளவு நீர் இல்லை என்பதற்கான அறிகுறி. 
சிறுநீரகத்தின் காவலன்: உடலில் போதுமான  தண்ணீர் இல்லாவிடில், சிறுநீரகங்கள் பெரிதும் பாதிக்கப்படும். உடலின் நச்சுக்களை நீக்க வழியில்லாதபோது, சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். ரத்தத்தைச் சீராக்கி, அனைத்து உறுப்புகளுக்கும் செலுத்தத் தண்ணீர் அவசியம். 
 
சுகாதாரமான தண்ணீர்: உணவகங்கள், வெளியிடங்களில் வாங்கிப் பருகும் நீர் சுத்தமானதாக இல்லாமல் போனால், கிருமிகள் வழியாக டைபாய்டு, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பிரச்னைகள் வரலாம்.
வாட்டர் பாட்டில் ப்ளீஸ்
கையில் எப்போதும் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ளலாம். இது பிளாஸ்டிக் பாட்டிலாக இல்லாமல் இருப்பது நலம். சிறுநீர் மஞ்சளாகவோ, அடர் மஞ்சளாகவோ இருந்தால், உடலில் தண்ணீர் போதவில்லை என அர்த்தம். காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீரோடு அந்த நாளைத் தொடங்குங்கள். தண்ணீரை ஒரே நேரத்தில் மடமடவென்று குடிக்காமல், கொஞ்சம், கொஞ்சமாகக் குடிப்பதே சரி.
எது நல்ல தண்ணீர்?
பாட்டில் தண்ணீர் மற்றும் கேன் தண்ணீர் ஆகியவற்றில் சத்துக்கள் நீக்கப்பட்டு, செயற்கைச் சத்துக்கள் கலந்து விற்கப்படுவதால், எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என உறுதியாகச் சொல்ல முடியாது. நம் நிலத்தடி நீரே குடிக்க உகந்தது. நிலத்தடி நீரை ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து, ஆறவைத்து வடிகட்டி பிறகு, குடிப்பது பாதுகாப்பானது.
தண்ணீர் தேவை?
ஒரு நாளைக்கு 8-10 டம்ளர்கள் நீர் அவசியம். குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீராவது அவசியம் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வோர், உடல் உழைப்பு அதிகம் உள்ள வேலை செய்பவர்கள், வெயிலில் அலைபவர்கள் இன்னும் அதிக அளவில் நீர் அருந்த வேண்டும். தண்ணீராக மட்டுமின்றி, நீர் நிறைந்த காய்கறி, பழங்களின் மூலமாகவும் நீரின் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.
நன்றி
டாக்டர் விகடன்

Friday, April 17, 2015

வயிறு - என்ன செய்யும்?

ற்களால்கூட கூழாக்க முடியாத உணவை, இரைப்பை அரைத்துவிடும். இரைப்பையில் உணவு செரிக்க, மூன்று மணி நேரம் பிடிக்கும். சாப்பிடும்போது, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சுருங்கி விரியும் இரைப்பை, சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை சுருக்கி விரியும். இதனால், வயிற்றில் வலி, பசி மயக்கம், சோர்வு ஏற்படும். உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும். நேரத்துக்குச் சாப்பிடுவது அவசியம்.
 
 பசிக்காமல்போனால், உண்ட உணவு சரியாகச் செரிமானம் ஆகவில்லை என்று அர்த்தம். அதிக உடல் எடை, இரவு உணவைத் தாமதமாகச் சாப்பிடுவது, செரிமானம் இன்மைக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. உணவுத் துணுக்குகள் உமிழ்நீருடன் சேர்ந்து, நன்கு ஜீரணமாக உதவுவதால், உணவை அப்படியே விழுங்காமல், நன்றாக மென்று சாப்பிட வேண்டும். கடின உணவைத் தவிர்த்து, மிருதுவான உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.     
 காரம் சாப்பிட்டால்தான் அல்சர் வரும் என்று, அந்தக் காலத்தில் சொல்லப்பட்டது. ஆனால் இன்றோ, எதற்கெடுத்தாலும் வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதாலும் அல்சர் வருகிறது. மருத்துவரின் பரிந்துரை இன்றி, வலி மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. சிவப்பு மிளகாய் பயன்படுத்துவதை, முடிந்தவரை தவிர்க்கவும்.
 நார்ச்சத்து நிறைந்த கொய்யா, பப்பாளி, வாழை போன்ற பழங்களைத் தினமும் சாப்பிடுவதும், கீரை சேர்த்துக்கொள்வதும், போதுமான அளவு நீர் அருந்துவதும், மலச்சிக்கலில் இருந்து தப்பிக்க உதவும்.
 செரிமானம் இன்மை, பசி இன்மை, தலைவலி, அஜீரணக் கோளாறு போன்ற காரணங்களால் வயிற்று உப்புசம் ஏற்படலாம். மேலும், ஹைப்போதைராய்டு, அதிக அளவு கொழுப்பு, அளவுக்கு அதிகமான சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலும் வயிறு வீங்கலாம். வயிற்றில் இருப்பது காற்றா, நீரா என்பதை, அல்ட்ராசவுண்டு ஸ்கேன் செய்துபார்த்து, அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.
 அதிக அளவு கொழுப்பு, வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும்போது, தொப்பை விழுகிறது. இதனால், உடல்பருமன் அதிகரித்து, சர்க்கரை நோய், இதயநோய்க்கு வழிவகுக்கும். முறையான பயிற்சி, நார்ச்சத்து, அதிகம் கொழுப்பு இல்லாத உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், தொப்பை வருவதைத் தவிர்க்கலாம்.
 பெண்களுக்கு, குழந்தைப் பிறப்புக்குப் பிறகு, வயிற்றில் வரிகள் (Stretch marks) ஏற்படும். வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வந்ததும், தசைகள் சுருங்குவதால் இந்த வரிகள் ஏற்படுகின்றன.  வயிற்றுத் தசைகளை இறுக்கும் பயிற்சிகள், நார்ச்சத்து உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம், இந்த வரிகளைப் போக்கலாம்.
 உணவு அலர்ஜி ஏற்பட்டாலும் வாந்தி வரலாம். வாந்தி வருவதைத் தடுக்கும் மருந்துகள் இருக்கின்றன. வாந்தி வரும்போது, அதைத் தடுப்பதைவிட, எடுத்துவிடுவதே நல்லது. அதிக அமிலங்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
 பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுதான் வயிற்றுப்போக்கு. இதனால், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைக் கிரகிக்க முடியாமல் போகிறது. உடலுக்குத் தேவையான ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது. வயிற்றுப்போக்குக்கான காரணத்தை சரிசெய்வதுடன், சத்தான உணவு, சுத்தமான தண்ணீர், திரவ உணவுகள் எடுத்துக்கொள்வதன்
மூலம், இழந்த சத்தை மீட்கலாம்.
 வயிற்றில் அதிகக் காற்று சேருவதற்கு, வாய் வழியாகக் காற்றை விழுங்குவதுதான் காரணம். நிதானமாகச் சாப்பிடுவது, மெதுவாகத் தண்ணீர் குடிப்பது, மூன்று வேளைக்குப் பதில், ஐந்து வேளையாக உணவைப் பிரித்து உண்பது போன்ற பழக்கங்களால் இதனைத் தவிர்க்கலாம். பாட்டில் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். சாப்பிட்டதும் அரை கிலோமீட்டர் மெதுவாக நடப்பது நல்லது.

நன்றி- டாக்டர் விகடன்.

Friday, April 10, 2015

சூப்பர் ஸ்டாக்கர் 3சி’ ப்ரியங்காவின் கண்டுபிடிப்பு....

க்ளீன் இந்தியா’ திட்டத்துக்காக பள்ளி மாணவர்கள் பலரும் தெருக்களில் இறங்கி சுத்தம் செய்ததையே மகிழ்ச்சியோடு பார்த்த நமக்கு, பெருமகிழ்ச்சி தருகிறார்... பலகட்ட பாய்ச்சலாக, நவீன குப்பைத் தொட்டியை உருவாக்கியிருக்கும் பதினோராம் வகுப்பு மாணவி, பிரியங்கா மதிஷரா. இவர் சென்னை, சர்ச் பார்க் பள்ளி மாணவி.
‘‘வீட்டின் எதிரில், வீதியில் பேருக்கு ஒரு குப்பைத் தொட்டி இருக்கும். அது எப்போதும் நிரம்பி வழியும். குப்பை அள்ள வருகிறவர்களைப் பார்க்கவும் பாவமாக இருக்கும். எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், கழிவுகளைக் கைகளால் அவர்கள் சுத்தம் செய்வது, கொடுமை. மனதை அரித்துக்கொண்டிருந்த இந்தக் காட்சிகள்தான், நவீன குப்பைத் தொட்டியைக் கண்டுபிடிக்கத் தூண்டியது.  
 
இதன் பெயர் ‘சூப்பர் ஸ்டாக்கர் 3சி’. இப்போது தெருக்களில் நாறிக்கொண்டும், நிரம்பி வழிந்துகொண்டும் அருவருக்க வைக்கும் குப்பைத் தொட்டிகள் போல இது இருக்காது. காரணம், இதில் குப்பையைக் கொட்டியதும் அவற்றை க்ரஷ் செய்து கம்ப்ரஸ் செய்துவிடும். இதனால் நிறைய இடம் கிடைக்கும். அப்படியே குப்பைத் தொட்டி நிரம்பிவிட்டால், உடனடியாக மாநகராட்சிக்கு எஸ்.எம்.எஸ்.  அனுப்பிவிடும். சூரிய சக்தி மூலமாக மின்சாரம் தயாரித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்தத் தொட்டியை உருவாக்கியுள்ளேன். இரவானதும் தானாகவே தெருவிளக்கு போல் எரியும். சி.சி.டிவி கேமராவும் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது’’ என்று ஆச்சர்யப்படுத்தும் பிரியங்காவின் கண்டுபிடிப்பை, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி என முக்கியத் தலைவர்களும், பல பெரிய நிறுவனங்களின் இயக்குநர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.
‘‘ `கிளீன் இந்தியாவுக்கு உனது கண்டுபிடிப்பு துணையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஐ வில் திங்க் அபௌட் திஸ்!’ என்று பிரதமர் மோடி சொன்னது பெரிய ஊக்கம் எனக்கு. யூஸர் ஃப்ரெண்ட்லியாகவும், அடித்தட்டு மக்களுக்கு பயன்படும் வகையிலுமான இன்னும் பல கண்டுபிடிப்புகளைச் செய்ய வேண்டும்!’’
- இளமையின் திறமையும் வேகமும் பிரியங்கா கண்களில்!

நன்றி-விகடன்

Friday, April 3, 2015

தேங்காயில் இருக்கு அழகும் ஆரோக்கியமும் !

‘பூலோகக் கற்பக விருட்சம்’ தென்னை மரத்துக்கு இன்னொரு பெயர்... தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மகத்துவமானது. தேங்காய் என்றால் சமையலுக்குத் தேங்காய்ப்பூ, தலைக்குத் தேய்க்க, தேங்காய் எண்ணெய் என இரண்டே உபயோகங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தென்னையின் ஒவ்வொரு பகுதியும் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பயன்படக்கூடியது.
தென்னம் பூ (பூம்பாலை)
தென்னை மரத்தின் பூ, சாப்பிடத்  துவர்ப்பாக இருக்கும். அதிக ரத்தப்போக்கு இருக்கும் பெண்கள், காலையில் வெறும் வயிற்றில் தென்னம் பூவைச் சாப்பிட்டு, உடனே பால் குடித்துவிட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து, காலை உணவைச் சாப்பிடலாம்.  மாதவிலக்கு ஆகும் சமயத்தில், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். மேலும், கர்ப்பப்பை பிரச்னைகளைச் சரிப்படுத்தும்.


வெயில் காலத்தில் ஏற்படும் கடுப்புக் கழிச்சல் எனப்படும் வயிற்று வலி. இதனால், சிலருக்கு மலம் கழிக்கும்போது, ரத்தம்கூட வரலாம். இதற்குத் தீர்வாக, தென்னம் பூச்சாறு, தயிர் - தலா 100 மி.லி, அரை எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து குடித்தால், வயிற்று வலி குறைந்து, மலம் கழிப்பது சுலபமாகும். ரத்தம் வெளியேறுவதும் நிற்கும். 

தென்னம் பூ, களர்ச்சிக்காய், நெருஞ்சி முள் ஆகியவற்றை 20 கிராம் அளவுக்குச் சம அளவில் எடுத்து, 100 மி.லி ஆட்டுப் பாலில் வேகவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, 48 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டுவர, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
குறும்பை
முதிராமல் உதிரும் தேங்காய்க்குக்  குறும்பை என்று பெயர். வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல்,  தீப்புண்ணுக்கு, குறும்பை நல்ல மருந்து. விஷம் குடித்ததால்  குடல் மற்றும் வயிற்றுப் பகுதியில்  ரணமாகியிருப்பவர்கள், அதிக மருந்து உட்கொண்டு வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள்,  அதிக மது குடித்து குடல் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது குறும்பையைத்தான்.

குறும்பையைச் சின்ன சின்னதாக நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, அது கால் லிட்டர் தண்ணீராகச் சுண்டிய பின், வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை குடிக்க வேண்டும்.
குருத்து
இளநீரை வெட்டும் போது வெள்ளைப் பகுதியாக சிறிது தடிமனாக இருப்பதுதான் குருத்து. இளம் தென்னங் குருத்தில் அதிகப் பலன்கள் உள்ளன. இது துவர்ப்புச் சுவையைத் தரும். வெள்ளைப் பகுதியை (குருத்து) நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, கொதிக்கவிட்டு,  கால் லிட்டர் தண்ணீராக மாறிய பின் குடிக்கலாம். வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை குடித்துவர, மூலம், ரத்த மூலம் போன்ற பிரச்னைகள் நீங்கும்.
இளநீர்
இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்டும் ரத்தத்தில் உள்ள எலக்ட்ரோலைட்டும் ஒரே அளவு என்பதால், அவசர காலத்தில் குளுக்கோஸுக்குப் பதிலாக, இளநீரையே சிலசமயம் நேரடியாக  ரத்த நாளத்தில் ஏற்றுவார்கள். அவ்வளவு மருத்துவப் பயன்கொண்டது. இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கவே கூடாது. அப்படிக் குடித்தால், இரண்டு நாட்கள் வரை வயிறு உப்பசமாக, மந்தமாக இருக்கும். காலை உணவு அல்லது மதிய உணவு முடிந்து, இரண்டு மணி நேரம் கழித்த பிறகே, குடிக்க வேண்டும்.
முற்றாத இளநீரைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். நீர்க்கடுப்புப் பிரச்னை இருந்தால், வெட்டிய இளநீரில் இரண்டு கிராம் சீரகத்தைப் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து சீரகம் கலந்த இளநீரைக் குடிக்கலாம்.
சீரகம், சிறுபயிறு தலா இரண்டு கிராம் எடுத்து, இளநீரில் ஆறு மணி நேரம் ஊறவைத்துக் குடிக்க வேண்டும். ஊறிய சீரகம் மற்றும் சிறுபயிறை நன்கு மென்று சாப்பிடலாம். தீவிரமான நீர்க்கடுப்பு, நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல், சிறுநீர் கழிக்காமல் இருத்தல், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்னைகள் குணமாகும்.
தேங்காய்ப் பால்
வாய்ப் புண், வயிற்றுப் புண் குணமாக, அரை மூடி தேங்காயிலிருந்து எடுத்த பாலில், சோம்பு கால் ஸ்பூன் கலந்து, குடிக்க வேண்டும்.  வண்டு, பூரான், அட்டைப் பூச்சிக் கடிக்கு வலியைப் போக்க, தேங்காய்ப் பாலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம். பூச்சி கடித்த இடங்கள், ஜலதோஷத்தினால் மூக்கில் ஏற்படும் புண்களுக்கு தேங்காய்ப் பாலில் நனைத்த பஞ்சை ஒற்றி எடுக்க ரணம் குணமாகும். அட்டைப் பூச்சிக்கடியின் மேல் தேங்காய்ப் பாலுடன், சுண்ணாம்பை சேர்த்து வைக்கலாம்.
தேங்காய்
தேங்காய்த் துருவல் 1/2 மூடி, பனங்கல்கண்டு 2 ஸ்பூன், 3 துளி நெய் கலந்து வாணலியில் வறுக்க, பாகு சேர்த்த பர்பி போல மாறும். அதை,  மிதமான சூட்டில் குழந்தைகளுக்குக் கொடுக்க, சளி, இருமல் நீங்கிவிடும். மலம் மூலமாகச் சளி வெளியேறும். இதைச் சாப்பிட்ட பின், தண்ணீர் குடிக்கக் கூடாது. பெரியவர்கள், இதோடு சிறிது சுக்குப் பொடி சேர்த்துச் சாப்பிட்டால், சளி, இருமல் தொல்லை நீங்கும்.
தேங்காய் அழகுப் பலன்கள்
தாவர எண்ணெய்களில் தேங்காயில்தான் கிளிசரின் அளவு (13.5) அதிகம். கொப்பரையிலிருந்தும் தேங்காய்ப் பாலிலிருந்தும் என இருமுறைகளில் தேங்காய் எண்ணெய் எடுக்கலாம். தேங்காய் பாலிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது.
தேங்காய்த் துருவலை அடுப்பில்வைத்து வதக்கினால், எண்ணெய் போல மிதக்கும், அவற்றை அப்படியே எடுத்து, மெல்லிய வெள்ளைத் துணியில் வைத்து, அம்மைத் தழும்புகள் இருக்கும் இடத்தில் தொடர்ந்து ஒற்றி எடுக்க, அம்மைத் தழும்புகள், கரும்புள்ளிகள் மறையும்.
ஒரு முழுத் தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட பாலை, அடுப்பில் வைத்துக் காய்ச்ச, அது எண்ணெயாக மாறும். அதைக் கரும்புள்ளிகள், அம்மைத் தழும்புகள், தீப்புண், வெட்டுக் காயங்கள், சொறி, சிரங்கு ஆகியவற்றில் மேல் பூசிவர, காயங்கள் தழும்புகள் மறைந்து அழகான சருமம் கிடைக்கும். பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் படர்தாமரைக்குக்கூட, இந்த எண்ணெயைப் பூசலாம். 
தலையிலும் சருமத்திலும் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு, செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயுடன் ஐந்து வெப்பாலை இலைகளைப் போட்டு மூன்று நாட்கள் வெயிலில்வைத்து, தலையிலும், சருமத்திலும் தடவினால், பொடுகு குணமாகும். உடல் முழுவதும் மசாஜ் செய்ய குழந்தைகளுக்குச் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணையே சிறந்தது.
சிரட்டை (தேங்காய் ஓடு) மூலமாகத் தயாரிக்கும் கான்சன்ட்ரேடட் எண்ணெயை, சித்த மருந்துக் கடைகளில் வாங்கி, அனைத்து சருமப் பிரச்னைகளுக்கும் தடவலாம். 
தேங்காய், இளநீர், தென்னம் பூ போன்ற தென்னை மரங்களின் மூலம் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ‘நாரிகேளாஞ்சனம்’ என்ற மையை, குறைந்த அளவில் எடுத்து, கண் மையாகப் பூசிவரலாம். இதனால், கண் வலி, கண் புரை, கண் தொற்று, கண் நோய்கள், பார்வைத் திறன் குறைதல் போன்றவை வராது. மாதவிலக்கு சமயங்களிலும், கருவுற்றபோதும், எண்ணெய் குளியல் எடுத்த அன்றும் இந்த மையைப் பூசக் கூடாது.
இனி தேங்காயை பயன்படுத்தும்போது, அதன் இத்தனை பலன்களும்  நினைவுக்கு வரும்தானே?

Friday, March 20, 2015

பாப்கான் சாப்பிடுங்க...

பாப்கான் சாப்பிடுங்க ஆரோக்கியமா வாழலாம்
ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாப்-கார்ன் வாங்கி சாப்பிடுங்கள். பாப்-கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் பாப்-கார்ன் மக்காசோனத்தினால் செய்யப்படுகிறது. அதனால் அதன் சத்துக்கள் போய்விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு, பாப்-கார்னில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும். இப்போது அந்த பாப்-கார்னில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்ப்போமா
தானியங்களில் ஒன்றான மக்காசோளத்தால் செய்யப்படும் பாப்-கார்னில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள், மற்ற பழங்கள் மற்றும் காய்களில் இருப்பதைப் போன்று, இதிலும் அடங்கியுள்ளன. ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, சிப்ஸ் மற்றும் பர்கர் போன்றவைகளை சாப்பிடுவதை விட, இந்த பாப்-கார்ன் மிகவும் சிறந்தது.
மேலும் பாப்-பார்னில் பாலிஃபினால் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற சத்துக்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இதில் இருக்கும் பாலிஃபினால் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், பாப்-கார்னில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான அளவு சத்துக்களில் 13% சத்துக்கள் கிடைக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பசியின்மை, புற்றுநோய், வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, இதய நோய் போன்றவை ஏற்படாமல் கட்டுப்படுத்தும். அதிலும் உடலில் செரிமானத் தன்மையை அதிகரிப்பதோடு, அழகான சருமத்தையும் தரும்.
நார்ச்சத்துக்களில் இரு வகைகளான கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என்று இருக்கின்றன. அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நீரில் கரையக்கூடியவை, கரையாத நார்ச்சத்துக்கள் நீரில் கரையாமல், அதனை பெருங்குடல் வழியாக உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றிவிடும். அத்தகைய கரையாத நார்ச்சத்துக்கள் பாப்-கார்னில் அதிகம் இருப்பதால், உடலில் செரிமான விரைவில் ஏற்படுவதோடு, மலச்சிக்கலையும் சரிசெய்யும். மேலும் இதனை சாப்பிடுவதால், அடிக்கடி பசிக்காமல் இருக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.

Friday, February 27, 2015

" அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’"

இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ – ஆச்சரியத் தகவல்
இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் கி.மு. 600) சுஸ்ருதர், உலகளவில்
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவமாமேதை. இவர் ரிஷி விஸ்வாமித்திரருக்குப் பிறந்தவர். உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமான “சுஸ்ருத சம்ஹிதை யை” மனித சமுதாயத்திற்க்குக வழங்கியவர். மயக்க மருந்து அ றிவியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாகப் போற்ற ப்படுபவர்.
இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், பன்னிரண்டு விதமான எலு ம்பு முறிவுக்கும், ஆறு விதமான மூட்டு நகர்வகளுக்கும் உண்டா ன மருத்துவ முறையை விளக்கிருக்கிறார். 125 விதமான அறு வை சிகிச்சை கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார். இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட் டை விளிம்பு கத்திகள், வடிக்கும் ரப்பர் குழாய் மற்றும் மலக்குட ல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும் பறவை களின் தாடைஎலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டவை .
இவர் மேலும் பல்வேறு தையல் முறைகளைப்பற்றியும் விளக்கியுள்ளார். குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு போ ன்றவற்றை நூலாக்க் கொண்டு தைத்திருக்கிறார். சுஸ்ருத சம் ஹிதையில், 300 விதமான அறுவை சிகிச்சை முறைகள் விள க்கப்பட்டுள்ளன. ஆச்சார்யர் சுஸ்ருதர், மருத்துவ உலகின், குறிப் பாக அறுவை சிகிச்சையின் மாமேதை என்று போற்றப்படுகிறார்.

Friday, February 20, 2015

கொஞ்சம் உணவு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?

கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?
தொலைதூரப் பயணங்களின்போது அரிதாக ஹோட்டல் உணவுகளைப் பயன்படுத்தியவர்களுக்குக்கூட, இன்று ஹோட்டல் உணவு அத்தியாவசியமாகிவிட்டது. சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூட பிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்துதான் தருகிறார்கள். எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கையே யன்படுத்துகின்றனர். ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் கொஞ்சம் பிளாஸ்டிக்கும் உள்ளே போவதுதான் அதிர்ச்சி.
ஹோட்டல்களில் நாம் சாப்பிடுவது இட்லி, தோசை, சாதம் மட்டுமல்ல; கூடவே பிளாஸ்டிக்கில் இருக்கும் ரசாயனங்களும்தான். உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிச் சொல்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஆய்வாளருமான  நித்யானந்த் ஜெயராமன்.
நல்ல பிளாஸ்டிக்?
‘நல்ல பிளாஸ்டிக்’ என்கிற ஒன்று இல்லவே இல்லை. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்றே வகைப்படுத்த முடியும். ஒரு லட்சம் சிந்தடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில் ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளனர். மீதம் உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும் என யாருக்குமே தெரியாது.
பொருளாதாரத்தில் வளமாக உள்ள, சத்தான உணவு உண்பவர்களின் ரத்தத்தை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் 275 ரசாயனங்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்த நிலை என்றால் பிற மக்களின் நிலை இன்னும் மோசம்.
பிரஷ் முதல் பால் வரை!
நம் அன்றாட வாழ்வில் காலையில் பல் துலக்குவதில் தொடங்கி இரவில் பால் குடிப்பது வரை எங்கும் எதிலும் பிளாஸ்டிக்தான். பிளாஸ்டிக் பிரஷ், பிளாஸ்டிக் ப்ளேட், பாக்கெட் பால், லன்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் என எங்கும் பிளாஸ்டிக் மயம். பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவை வைக்கும் போது பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனம் உணவோடு கலந்து விடும். இப்படி ஒவ்வொரு நாளும் தெரிந்தும், தெரியாமலும் ரசாயனங்கள் உணவு மூலமாக தினமும் நம் உடலில் சேர்கின்றன. இதனால் பலவிதமான நோய்களும், குறைபாடுகளும் ஏற்படுகின்றன” என்றார். பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் உணவோடு கலந்து பின்விளைவுகளை எப்படி ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி விளக்குகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரான விமல்ராஜ்.
“பிளாஸ்டிக் பொருட்கள் தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் உருவாக்கப்படுவது இல்லை. தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது. இதில் ஏழு வகையான தாலேட்ஸ்கள் மிக ஆபத்தானவை. நாம் வாங்கும் வாட்டர் பாட்டிலின் அடிப்பகுதியைப் பார்த்தால், முக்கோண வடிவில் எண் 1  என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதே போல பாட்டிலின் லேபிளிலும் ‘ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதை நாம் கவனிக்காமல் பல நாட்களுக்கு அதே பாட்டிலைப் பயன்படுத்தி வருகிறோம். மலிவான விலையில் உற்பத்தியாகும் பாட்டிலில் இருந்து டி.இ.எச்.பி (Di(2-Ethylhexyl) Phthalate (DEHP)) என்ற ரசாயனம் வெளியாகி நீருடன் கலக்கும். இது புற்றுநோய் உண்டாக்கும் காரணியாக மாறுகிறது.
தாலேட்ஸ் உள்ள பி்ளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு இயல்புக்கு மீறிய பாலின உறுப்புகள் வளர்ச்சி, ஆண்மைக்்குறைவு, குழந்தை களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு அதிக மார்பக வளர்ச்சி, கருச்சிதைவு, குறைப்பிரசவம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது” என்றார்.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் நாராயணன்.
‘‘ஹோட்டலில் 40 மைக்ரான்கள் கொண்ட கவர்களில்தான் உணவை பேக் செய்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆவி பறக்க, சூடான சாம்பார், ரசம், பொரியல் என பேக் செய்யும் கவர்கள் நிச்சயம் அதிக மைக்ரான்களால் தயாரிக்கப்படுவது இல்லை. கவரில் உள்ள டயாக்சின் (Dioxin) என்ற ரசாயனம் உணவோடு சூடாகக் கலக்கும்போது வயிற்றுக் கோளாறு, பசியின்மை, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும். தொடர்ந்து ஹோட்டல் உணவையே பார்சல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் மலட்டுத்தன்மை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். .பார்சல் உணவைப் பாதுகாப்பாய் மாற்ற...
அலுமினியம் ஃபாயில், பிளாஸ்டிக் கவர், பேப்பர் கப் என எந்த உணவு கவராக இருந்தாலும் அதில் ஐ.எஸ்.ஐ தர முத்திரை  உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். 40 மைக்ரான்கள் அடர்த்தி கொண்ட கவரில் பார்சல் செய்து தரும்படி கேட்கலாம். பிளாஸ்டிக் கவர்களிலேயே ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடிய கவர்கள் என பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. 40 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குக் கீழ் என்று உள்ள கவரை மட்டுமே ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீசரில் வைக்கலாம்.
ஹோட்டலில் பார்சல் வாங்கும் முன் சாப்பாட்டை, வாழை இலையில் கட்டித் தரச் சொல்லுங்கள். சாம்பார், ரசம், பொரியல் எனில் வாழை மட்டை, தென்னை மட்டை, பனை மட்டை, பாக்கு மட்டை என இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் பேக் செய்து தர வேண்டும் என  ஹோட்டல் உரிமையாளரிடம் கேளுங்கள்.அந்தக் காலத்தில் ஹோட்டலில் உணவு வாங்கும் போது சாம்பார், ரசத்துக்கு என டிபன் கேரியர் எடுத்துச்செல்வர். அதை இப்போதும் பின்பற்றினால் நல்லது.
பிளாஸ்டிக்கில் கவனம்
குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கும்போது பி.பி.ஏ ஃப்ரீ (BPA Free),  தாலேட்ஸ் ஃப்ரீ (Phthalates free) மற்றும் பி.வி.சி ஃப்ரீ (P.V.C free)  என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனிக்க  வேண்டும். அவெனில் (Oven) சமைக்க, எவ்வளவு பெரிய  பிராண்ட் தயாரிப்பாக  இருந்தாலும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது.  கண்ணாடிப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டுக்கு வாங்கும் தண்ணீர்  கேனின் எண் 2, 4, 5 என அச்சிடப் பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை நெருப்பிலிருந்தும், சூரிய ஒளியில் இருந்தும் தள்ளியே வைக்க வேண்டும். பிளாஸ்டிக்குக்குப் பதில் கண்ணாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பீங்கான், மண் பாத்திரம், இரும்புப் பாத்திரம், செம்புப் பாத்திரங்களைப்  பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் பயன்படுத்தினால் புற்றுநோய்?
சதீஷ், புற்றுநோய் சிறப்பு மருத்துவர்
'ஹோட்டலில் பேக் செய்து தரப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மிகவும் மட்டமான பிளாஸ்டிக்கை சேர்ந்தவை. சூடாகவோ, மிதமான சூடாகவோ உணவை பிளாஸ்டிக் கவரால் பேக் செய்தால் பிபிஏ என்ற கெமிக்கல் அதிக அளவில் வெளிவந்து உணவுடன் கலந்துவிடும். தொடர்ச்சியாக 1015 ஆண்டுகள் வரை  பிளாஸ்டிக் கவரிலோ, பாத்திரங்களிலோ சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். அதுபோல பிளாஸ்டிக் பாட்டிலை பல ஆண்டுகள் பயன்படுத்தினாலும் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உடலில் சேரும்போது ஹார்மோன்களின் இயக்கத்தில் மாற்றம் உண்டாகும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் சுரந்து மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் உண்டு. ஆண்களுக்கு எனில் ப்ராஸ்டேட் புற்றுநோய் வரலாம். அவெனில் சூடு செய்யும்போது பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் அதிக அளவில் உணவுவோடு கலக்கிறது, இதனால் ரத்தப் புற்றுநோய் வர வாய்ப்புகளும் அதிகம். சூடு செய்யாமல் லன்ச் பாக்ஸ் போல உணவை எடுத்து சென்றாலும், தொடர்ந்து பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம் என்பதால் மெல்ல மெல்ல பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உணவுடன் கலக்கும். ஆகவே, எந்த வகைகளிலும்  பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது நல்லது. ''
கண்ணாடியிலும் கவனம்
உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் பாது காக்கும் பிளாஸ்டிக் பைகளில் பிஸ்பீனால்-ஏ (Bisphenol-A) என்ற வேதிப்பொருள் கலந்திருக்கும். இது மூளை மற்றும் இனப்பெருக்க மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பிஸ்பீனால்-A பற்றிய விரிவான ஆராய்ச்சியை கனடா மேற்கொண்டு, பீஸ்பீனால் ஏ-யை பிளாஸ்டிக்கில் சேர்க்கத் தடை விதித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் சாம்பார் பொடி முதல் பேரீச்சம் பழம் வரை பீஸ்பினால் கலந்த பிளாஸ்டிக் பைகளில் அடைத்துத்தான் விற்கிறார்கள்.
ஜூஸ், பால் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களை அடைத்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு  பாலியோலெஃபின்ஸ் (Polyolefins) என்று பெயர். இதில்  பென்சோபீனோன் (Benzophenone) என்கிற ரசாயனம் இருக்கிறது. இது பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தைப் பாதித்து, மாதவிடாய்ப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
கண்ணாடிப் பாத்திரங்கள்தான் உணவைப் பதப்படுத்திவைக்க சிறந்தவையாக கருதப்பட்டு வந்தன. எனினும் சில நிறுவனங்கள் அதிகளவில் செறிவூட்டப்பட்ட உணவுப்பொருட்களைச் சேமித்து வைக்கும்பொருட்டு கண்ணாடிப் பாத்திரங்களில்  காரீயம் (led) கலக்கிறார்கள். இந்த காரீயம் உணவுப்பொருளில் கலந்து உடலில் சேரும்போது வாந்தி, கல்லீரல் பிரச்னை, சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கண்ணாடியிலும் கவனம் தேவை.
பு.விவேக் ஆனந்த்
பிளாஸ்டிக் ரகசியம்
ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளிலும் உள்ள குறியீடுகள் அதன் பிளாஸ்டிக் தன்மையை விளக்குகிறது.
1 Polyethylene terephtalate  (PETE or PET) -  தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள்.
2 High density polyethylene (HDPE) - பால் கேன், டிடர்ஜன்ட், பழச்சாறு பாட்டில்கள்.
3 Polyvinyl chloride (PVC) உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய் பாக்கெட் மற்றும் பாட்டில்கள். 
4 Low density polyethylene (LDPE) - மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர்
5 Polypropylene - தயிர் கப், யோகர்ட் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா.
6 Polystyrene/Styrofoam - மருந்து பாட்டில்கள், மின்விளக்கு ஸ்விட்ச்
7 எண் 1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தி இருப்பார்கள்.  சிடி, கணினி பகுதிகள், பேபி பாட்டில் போன்றவை இந்த பிளாஸ்டிக்கால் தயாராகின்றன. இதில் உணவுப் பொருட்களையும் சேமித்துவைக்கக் கூடாது.
   குறைந்த மோசமான பிளாஸ்டிக் எண்கள் -  2, 4, 5
   குறைந்த மோசமான பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது - 1
   மிகவும் மோசமான பிளாஸ்டிக் எண்கள் -  3, 6, 7

Friday, February 13, 2015

விக்கல் ஏன் வருகிறது?

பொதுவாக, விக்கல் வரும்போது அதை நிறுத்த அருகில் போய் பயமுறுத்துவோம். உடனே விக்கலும் நின்றுவிடும். பயமுறுத்துதல்தான் விக்கலுக்குத் தீர்வா? விக்கல் ஏன் வருகிறது? விக்கல் வந்தால், என்ன செய்ய வேண்டும்?
விக்கல் ஏன் வருகிறது?
“நெஞ்சுப் பகுதியையும் வயிற்றையும் பிரிக்கும் வகையில் உதரவிதானம் (Diaphragm) என்ற தசை இருக்கிறது.  அதில் ஏற்படும் துடிப்புதான் விக்கலாக நமக்குத் தெரிகிறது. அவ்வாறு துடிப்பு ஏற்படும்போது, நுரையீரல் சுருங்கி விரியும் செயல்பாட்டில், சிறு மாற்றம் உண்டாகி தொண்டையின் குரல் நாளம் வழியாக சத்தத்துடன் விக்கல் வருகிறது. உணவை வேகமாகச் சாப்பிடும்போதும், வயிறு நிரம்பச் சாப்பிடும்போதும், வாயுக்கள் நிறைந்த பானங்களை அருந்தும்
போதும், மது குடிக்கும்போதும் விக்கல் வருகிறது.  இது சில நிமிடங்கள் வரை நீடித்துவிட்டு, பிறகு நின்றுவிடும். இதற்குப் பயப்படத் தேவை இல்லை.”
பயமுறுத்தினால் விக்கல் நிற்பது ஏன்?
“பயமுறுத்தும்போது, அதிர்ச்சியில் சில நொடிகளுக்கு அனைத்து உள் உறுப்புகளும் ஒரு நிலையில் அதிர்வதால் நரம்பு மண்டல இயக்கம், சுவாசம், நுரையீரலின் இயக்கம் ஆகியவை நின்று மீண்டும் செயல்படுகின்றன.  இதனால் விக்கல் நிற்கிறது. ஆனால், இது சரியான முறை அல்ல. இதைப் பின்பற்றவும் கூடாது.”
தீர்வு?
“விக்கல் வரும்போது, மெதுவாக நீர் அருந்துவது, ஒரு ஸ்பூன் சர்க்கரையைச் சாப்பிடுவது, 10-20 நொடிகள் வரை மூச்சை இழுத்துப் பிடித்துவிட்டு, பின்பு, மூச்சை மெதுவாக வெளியிடுவது போன்ற செயல்களைச் செய்யலாம். ஆனால், தொடர்ந்து ஒரு நாளுக்கு மேல் விக்கல் வந்துகொண்டே இருந்தால், அதைச் சாதாரணம் என எண்ணி, கவனக்குறைவாக இருத்தல் கூடாது.
உணவுக்குழாயில் பிரச்னை, வயிறு தொடர்பான பிரச்னை,  நிமோனியா, மூளையில் கட்டி,  பின் மூளையில் பக்கவாதம் ஏற்படுதல், உடலில் சோடியத்தின் அளவு குறைதல், சிறுநீரகத்தில் குறைபாடு போன்ற பிரச்னைகளின் அறிகுறியாகவும் விக்கல் இருக்கலாம்.  எனவே, தொடர் விக்கலுக்கு மருத்துவரிடம் செல்வதுதான் சரி.
90 சதவிகித தொடர் விக்கல் பிரச்னைக்குக் குடல் தொடர்பான  பிரச்னைகளும், 10 சதவிகித தொடர் விக்கலுக்கு நரம்பு தொடர்பான  பிரச்னைகளும் காரண
மாக இருக்கலாம்.”