ஞானத் தீ
கவிஞர். வைரமுத்து
நெருப்பின் அம்சம்
நாமெல்லாம்!
வெளிச்சம் அறிவு!
வெப்பம் உழைப்பு!
அணைதல் என்பது
அடங்குதலின்றி
அழிதல் இல்லை!
வேலை வந்தால்
விழித்தெழுவோம்!
முதலைகள் போல் நாம்
கண்கள் திறந்தே உறங்குவோம்!
எவரும் உரசினால்
பரபரவென்று
பற்றுவோம்!
திசைகள் எல்லாம்
இடம் மாறும்படி
திடுக்கிட வைப்போம்!
முடியும் நம்மால்
நெருப்பின் அம்சம்
நாமெல்லாம்!
சூரிய நெருப்பில்
நழுவிய துளியே பூமி!
நழுவிய துளியில்
சிதறிய பொறிகள்!
பற்றுதல் பரவுதல்
நெருப்பின் அம்சம்!
உள்ளே நெருப்பு
இல்லாதவர்க்கு
சூரியனும் ஒரு கரித்துண்டு!
உள்ளே நெருப்பு
உள்ளவர்க்குக்
கரித்துண்டும் ஒரு சூரியன்!
அம்ரிதா:
நாம் அனைவௌம் நெருப்பைப் போன்றவர்கள்.நம்மால்
எதயும் சாதிக்க முடியும்.